KIZHAKKE PAARTHEN

கிழக்கே பார்த்தேன்

Movie: Autograph

Singers: Yugendran

Music director: Bharadwaj

கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி..
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி..
தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய் அன்பு தோழி..
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன் உன்னால் தோழி..
தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மை ஆனதடி..
நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி..
 
கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி..
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி..

மழையோ உந்தன் புன்னகை மனசெல்லாம் மெல்ல நனையுதே..
பனியோ உந்தன் பார்வைகள் என் கண்ணிமை மயிர்களில் தூங்குதே..
வேருக்குள் விழுந்த நீர்த்துளி பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே..
உனக்குள் ஏற்படும் உற்சவம் என்னையும் குதூகலம் படுத்துதே..
தோழி ஒருத்தி கிடைத்தால் இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்..
இதுவரை இந்த உண்மை ஏன் தெரியவில்லை எவர்க்கும்..
மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை..
அதை உன்னால் உணர்ந்தேன் தோழி..
படைத்தவன் கேட்டால் கூட உன்னை கொடுத்திட மாட்டேன் தோழி..

Well my friend I have something to say
I want you to listen listen to me 
This is what I have to say
Here it goes

தாகம் என்று சொல்கிறேன் 
மரக்கன்று ஒன்றை தருகிறாய்..
பசிக்குது என்று சொல்கிறேன்
நெல்மணி ஒன்றை தருகிறாய்...
உந்தன் கைவிரல் பிடிக்கையில் புதிதாய் நம்பிக்கை பிறக்குது..
உந்தன் கூட நடக்கையில் ஒன்பதாம் திசையும் திறக்குது..
என் பயணத்தில் எல்லாம் நீ கை காட்டி மரமாய் முளைத்தாய்..
என் மனதை உழுது நீ நல்ல விதைகளை விதைத்தாய்..
என்னை நானே செதுக்க நீ உன்னையே உளியாய் தந்தாய்..
என் பலம் எதுவென்று எனக்கு நீ இன்றுதான் உணர வைத்தாய்..