OVVORU POOKALUME
ஒவ்வொரு பூக்களுமே
Movie: Autograph
Singers: K.S.Chithra
Music director: Bharadwaj
பெண்: ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே..
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே..
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்..
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஓரு நாளில்..
மனமே ஓ மனமே நீ மாறிவிடு..
மழையோ அது பனியோ நீ மோதிவிடு..
உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போககூடாது..
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்ற கூடாது..
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்..
காலப்போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும் மாயம்..
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்..
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்..
தோல்வி இன்றி வரலாறா..
துக்கம் என்ன என் தோழா..
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்..
மனமே ஓ மனமே நீ மாறிவிடு..
மழையோ அது பனியோ நீ மோதிவிடு..
வாழ்க்கை கவிதை வாசிப்போம்..
வானம் அளவு யோசிப்போம்..
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்..
இலட்சம் கனவு கண்ணோடு..
இலட்சியங்கள் நெஞ்சோடு..
உன்னை வெல்ல யாரும் இல்லை..
உறுதியோடு போராடு..
ஆண்: மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்..
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்..
பெண்: தோல்வி இன்றி வரலாறா..
துக்கம் என்ன என் தோழா..
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்..
மனமே ஓ மனமே நீ மாறிவிடு..
மழையோ அது பனியோ நீ மோதிவிடு..
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே..
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே..
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்..
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்..
மனமே ஓ மனமே நீ மாறிவிடு..
மழையோ அது பனியோ நீ மோதிவிடு..
......................
Songs lyrics from Autograph movie:-
