SAGIYE SAGIYE
சகியே சகியே
Movie: Youth
Singers: Hariharan, Harini
Music director: Mani sharma
ஆண்: சகியே சகியே சகித்தால் என்ன..
பெண்: சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன..
ஆண்: உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக..
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக..
பெண்: உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக..
நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக..
ஆண்: சகியே சகியே சகித்தால் என்ன..
பெண்: சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன..
பெண்: ஏப்ரல் மாதத்தில் பூக்கும் பூக்கள் அத்தனையும்
இன்று முன் கூட்டி மலர்ந்ததென்ன..
ஆண்: உந்தன் கொலுசின் பாடல் கொடியின் காதில் கேட்டது கேட்டது அதனால்..
பெண்: ஜூலை ஏழாம் நாள் மாலை ஏழு பத்தோடு
உந்தன் காலங்கள் உறைந்ததென்ன..
ஆண்: உன்னை முதலாய் முதலாய் பார்த்ததும் மூச்சே நின்றது நின்றது அதனால்..
பெண்: உன் உயிரின் பெண் வடிவம் நான் தானே..
என் உயிரின் ஆண் வடிவம் நீதானே..
ஆண்: என்னென்று ஏதென்று சொல்வேனே..
சில்லென்று தீ ஒன்று நீதானே..
சகியே சகியே சகித்தால் என்ன..
பெண்: உன்னை கண்டதும் எந்தன் பச்சை நரம்பும்
வெட்க செந்தூரம் அணிந்ததென்ன..
ஆண்: உந்தன் உடலும் உடையும் ஊடல் கொள்ளும் ரகசியம் ரகசியம் என்ன..
பெண்: உன்னை கண்டதும் வாழ்வின் பாதி நீயென்று
வானில் அசரீரி ஒலித்ததென்ன..
ஆண்: எந்தன் உயிரும் உடலும் உந்தன் திசையில் சாய்ந்தது சாய்ந்தது என்ன..
பெண்: உன் மார்பும் உன் தோளும் என் வீடு..
என்னென்ன செய்வாயோ உன் பாடு..
ஆண்: உன் கன்னம் நான் உண்ணும் பூக்காடு..
உன் உதடே என் உணவு இப்போது..
பெண்: சகியே சகியே சுகித்தால் என்ன..
ஆண்: சகியே சகியே சகித்தால் என்ன..
.........................
Songs lyrics from Youth movie:-
