POONGATRE POONGATRE
பூங்காற்றே பூங்காற்றே
Movie: Paiyaa
Singers: Benny dayal
Music director: Yuvan Shankar raja
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்..
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்..
என் நெஞ்சோடு வீசும் இந்த பெண்ணோட பாசம்..
இவள் கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் பேசும்..
என் காதல் சொல்ல ஒரு வார்த்தையில்லை..
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை..
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்..
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்..
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்..
கொஞ்சி பேசும் காற்று தொட்டு செல்லுதே..
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டி கொண்டதே..
கண்ணாடி சரி செய்து பின்னாடி உன் கண்ணை பார்க்கின்றேன் பார்க்கின்றேன்..
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தை பேசாமல் தோற்கின்றேன் தோற்கின்றேன்..
வழிபூக்கள் போனாலும் வழியில் காலடி தடம் இருக்கும்..
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்..
அழகான நதி பார்த்தால் அதன் பெயரினை கேட்க மனம் துடிக்கும்..
இவள் யாரோ என்ன பேரோ அதை அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்..
ஏதேதோ ஊர் தாண்டி ஏராளம் பேர் தாண்டி போகின்றேன் போகின்றேன்..
நில்லென்று சொல்கின்ற நெடுஞ்சாலை விளக்காக அணைகின்றேன் எரிகின்றேன்..
மொழி தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே..
வழிதுணையாய் நீ வந்தால் போகும் தூரம் குறைகிறதே..
என் நெஞ்சோடு வீசும் இந்த பெண்ணோட பாசம்..
இவள் கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் பேசும்..
என் காதல் சொல்ல ஒரு வார்த்தையில்லை..
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை..
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்..
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்..
..........................
Songs lyrics from paiya movie: