ENGENGEY ENGENGEY

 எங்கெங்கே




Movie: Nerukku ner

Singers: Hariharan,  Asha bhosle

Music director: Deva  


பெண்: எங்கெங்கே எங்கெங்கே 
எங்கே இன்பம் உள்ளதென்று தேடி கொல்லாதே..
ஓ தள்ளிப்போ தள்ளி போ 
இந்த பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே..
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே..

ஆண்: நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான் செல்லாதே தள்ளி செல்லாதே..
ஓ என்னம்மா என்னம்மா உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா..

ஆண்: என் தூக்கத்தில் என் உதடுகள்..
உன் பேர் சொல்லி புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்..

பெண்: என் கால்களில் பொன் கொலுசுகள்..
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்..

ஆண்: பூப்போல இருந்த மனம் இன்று 
மூங்கில் போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே..
இதயம் துடிக்கும் உடலின் வெளியே..

பெண்: எங்கெங்கே எங்கெங்கே 
எங்கே இன்பம் உள்ளதென்று தேடி கொல்லாதே..

பெண்: என் வீதியில் உன் காலடி.. 
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்..

ஆண்: உன் ஆடையின் பொன் நூலிலே.. 
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்..

பெண்: நான் உன்னை துரத்தியடிப்பதும்..
நீ எந்தன் தூக்கம் பறிப்பதுவும்..
சரியா முறையா காதல் பிறந்தால் இதுதான் கதியா..

பெண்: எங்கெங்கே எங்கெங்கே 
எங்கே இன்பம் உள்ளதென்று தேடி கொல்லாதே..
ஓ தள்ளிப்போ தள்ளி போ 
இந்த பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே..
நான்  ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே..

ஆண்: நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான் செல்லாதே தள்ளி செல்லாதே..
என்னம்மா என்னம்மா உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா..