THODA THODA VENAVE VANAVIL ENNAI
தொட தொட வெனவே
Movie: Thulladha manamum thullum
Singers: Hariharan, K.S.Chithra
Music director: S.A.Rajkumar
பெண் : தொட தொட வெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்..
ஆண்: விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்..
பெண்: மன்னவா ஒரு கோயில் போல் இந்த மாளிகை எதற்காக..
ஆண்: தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக..
பெண்: வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே என்னை எங்ஙனம் காப்பாய்..
ஆண்: கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்..
பெண்: சாத்தியமாகுமா..
ஆண்: நான் சத்தியம் செய்யவா..
பெண் : தொட தொட வெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்..
பெண்: இந்த பூமியே தீர்ந்து போய்விடில் என்னை எங்கு சேர்ப்பாய்..
ஆண்: நட்சத்திரங்களை தூசு தட்டி நான் நல்ல வீடு செய்வேன்..
பெண்: நட்சத்திரங்களின் சூட்டில் நான் உருகி போய்விடில் என் செய்வாய்..
ஆண்: உருகிய துளிகளை ஒன்றாக்கி என் உயிர் தந்தே உயிர் தருவேன்..
பெண்: ஏ ராஜா..இது மெய்தானா..
ஆண்: ஏ பெண்ணே..
தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை..
பெண்: நான் நம்புகிறேன் உன்னை..
பெண் : தொட தொட வெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்..
ஆண்: விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்..
பெண்: நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை இதில் எங்கு நீச்சல் அடிக்க..
ஆண்: அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும் இந்த அல்லிராணி குளிக்க..
பெண்: இந்த ரீதியில் அன்பு செய்தால் என்ன ஆகுமோ என் பாடு..
ஆண்: காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைது செய்வதென ஏற்பாடு..
பெண்: பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்..
ஆண்: ஏ ராணி..அந்த இந்திரலோகத்தில் நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்..
பெண்: உன் அன்பு அது போதும்..
பெண் : தொட தொட வெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்..
ஆண்: விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்..
பெண்: மன்னவா ஒரு கோயில் போல் இந்த மாளிகை எதற்காக..
ஆண்: தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக..
பெண்: வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே என்னை எங்ஙனம் காப்பாய்..
ஆண்: கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்..
பெண்: சாத்தியமாகுமா..
ஆண்: நான் சத்தியம் செய்யவா..
......................
Songs lyrics from thulladha manamum thullum movie: