VINVEERA
விண்வீரா
Movie: Tik Tik Tik
Singers: Ranjith, Sri rascol
Music director: D.Imman
விண்வீரா விண்வீரா விண்வீரா..
இது வாழ்வின் சாவின் மையக்கோடடா..
விண்வீரா விண்வீரா விண்வீரா.. அதன்மீது ஏறி ஆட்டம் போடடா..
விண்வீரா.. விண்வீரா..
முடியும் முடியும் சிந்தித்துப்பார்..
சிந்தித்த சிந்தனை நடத்திப் பார்..
உன் மேல் நம்பிக்கை வைத்து பார்..
விண்வீரா.. விண்வீரா..
முடியும் முடியும் சிந்தித்துப்பார்..
சிந்தித்த சிந்தனை நடத்திப் பார்..
சாதனை படைக்க எழுந்திடு.. தமிழா.. தமிழா..
முடியாது என்றால் முடியும்
எதையும் இதயம் அடையும்
இருளின் மீது எட்டி உதைத்தால்
எல்லா வானும் விடியும்
எரியாதென்றால் எரியும்
லட்சம் லட்சிய திரியும்
கொஞ்சம் உற்றுப் பார்த்தால்தான்
உன் தீயின் ஆழம் புரியும்
தேய்வது தேய்வது எல்லாமே
நீ புதிதாய் மாறிட தானே
வீழ்வது வீழ்வது எல்லாமே
நீ விண்ணில் ஏறிட தானே..
விண்வீரா விண்வீரா விண்வீரா..
இது வாழ்வின் சாவின் மையக்கோடடா..
விண்வீரா விண்வீரா விண்வீரா.. அதன்மீது ஏறி ஆட்டம் போடடா..
விண்வீரா விண்வீரா விண்வீரா..
விண்வீரா இன்று ஜெயிப்போம்
முயற்சி கொண்டு உழைப்புக்கு பலன் நிச்சயம் உண்டு
விண்வீரா விண்வீரா விண்வீரா
நிறுத்தாதே போராடு விண்வீரா
சாதனை படைக்க எழுந்திடு தமிழா.. தமிழா..
நொடியினில் ஏதும் மாறாதே மாறாதே போராடு நீ நிறுத்தாதே
வலி என்னும் ஒன்று இல்லாமல் நான் இல்லை நீ இல்லையே மறக்காதே
பந்தாய் விழுந்து எழுந்து உன் நெஞ்சம் இன்று
வானின் உயரம் அளக்குதோ
நன்றாய் உருண்டு திரண்ட உன் தோள்கள்
இன்று வானின் அகலம் அளக்குதோ
விண்வீரா விண்வீரா விண்வீரா
இது வாழ்வின் சாவின் மையக்கோடடா
விண்வீரா விண்வீரா விண்வீரா அதன்மீது ஏறி ஆட்டம் போடடா
வெற்றியடைய எது தடுத்தாலும் படை எடுத்து நீ தடை உடைத்து நீ வா வா விண்வீரா
முயற்சி எடுப்போம் சாதனை படைப்போம் வா வீரா நீ வா
விதியா சதியா போராடி வெல்வோம்
வா விண்வீரா எழுந்திடு முடியும் உன்னால் முடியும் சாதித்திடு
உலகம் உன்னை தடுக்கும்
தடுத்துப் பார்க்கட்டும்
உன்னை பார்த்தே சிரிக்கும்
சிரிக்க சிரிக்கட்டும்
உந்தன் செயல்கள் பேசும் பொழுதோ ஊரின் வாயை அடைக்கும்
அடைக்கும்
ஏய் குழப்பம் எல்லாம் மறையும்
குவிய புள்ளி தெரியும்
யாக்கை ரெக்கை கொண்டால்தான் வாழ்க்கை இன்னும் விரியும்
விண்வீரா விண்வீரா விண்வீரா
இது வாழ்வின் சாவின் மையக்கோடடா..
விண்வீரா விண்வீரா விண்வீரா அதன்மீது ஏறி ஆட்டம் போடடா..
Here we go...
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
தயக்கம் வேண்டாம் மயக்கம் வேண்டாம்
விதியை சிதைப்போம் தடைகள் உடைப்போம்
ஒன்றாய் எழுவோம் சாதனை படைப்போம்
தயக்கம் வேண்டாம் மயக்கம் வேண்டாம்
விதியை சிதைப்போம் தடைகள் உடைப்போம்
ஒன்றாய் எழுவோம் முன்னோக்கி செல்வோம்
விதியை வெல்வோம் வெற்றி அடைவோம்
....................
Songs lyrics from tik tik tik movie:
