UN THALAI MUDI

 உன் தலை முடி


Movie: Kadhalil vizhundhen

Singers: Karthik,  nitish gopalan, maya

Music director: Vijay antony


பெண்: உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே..
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்..
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே..
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்..
உன்னை வானத்தில் தேடியே..
மேகம் கண்ணீரை சிந்துதோ..
உன்னை நான் கண்டு சேரவே பூமி என்னோடு சுற்றுதோ..

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே..
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்..
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே..
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்..

ஆண்: உச்சந்தலை மீது நீ கொடுக்கும் முத்தம்..
உயிரின் மீது பட்டுத் தெறிக்கும்..
கைகள் பற்றி கொண்டே பேசிக் கொள்ளும் நேரம் இனிக்கும்..
எதிர் வரும் காற்று உன் பெயரை என் மேல்
தினமும் கிறுக்கி விட்டு போகும்..
உன் நெற்றிப் பொட்டுக்குள்ளே கொட்டி விட்டேன் என்னை முழுதும்..

பெண்: உன் கண்ணில் பட்ட பூவை கூந்தலுக்குள் வைப்பேன்..
காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்..
கையில் பட்ட என்னை உன் இதய பையில் வைப்பேன்..
என்னை கொடுப்பேன்..ஓ..

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே..
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்..
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே..
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்...

பெண்: நீயும் என்னை தினம் தேட வேண்டும் என்று..
தொலைந்து போக கொஞ்சம் ஆசை..
நான் அணைத்து தூங்கும் மீசை வைத்த பொம்மை நீயே..
மேய்ச்சல் நிலமாக விழுந்து கிடக்கின்றேன்..
மேய்ந்து கொள் என்னை முழுதும்..
தொட்டிலின்றி தூங்கும் என் மார்பில் உந்தன் முத்தம் தினமும்..

ஆண்: உன்னை பற்றி ஏறும் காதல் கொடி நானே..
உன் கையெழுத்தை தாங்கும் காகிதமும் நானே..
உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே..
எந்தன் உயிரே..ஓஓஓ...

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே..
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்..
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே..
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்..
உன்னை வானத்தில் தேடியே..
மேகம் கண்ணீரை சிந்துதோ..
உன்னை நான் கண்டு சேரவே பூமி என்னோடு சுற்றுதோ..





.....................





Songs lyrics from Kadhalil vizhundhen movie: