VIZHIYIL UN VIZHIYIL

 விழியில் உன் விழியில்

Movie: Greedam 

Singers: Sonu nigham, swetha mohan

Music director: G.V.Prakash kumar 

ஆண்: கண்ணோடு கண் சேரும் போது..
வார்த்தைகள் எங்கே போகும்..
கண்ணே உன் முன்னே வந்தால்..
என் நெஞ்சம் குழந்தை ஆகும்..

விழியில் உன் விழியில்.. 
வந்து விழுந்தேன் அந்த நொடியில்..
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே..

பெண்: வழியில் உன் வழியில்..
வந்து நடந்தேன் அந்த நொடியில்..
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே..

ஆண்: உன்னோடு வாழ்ந்திட தானே நான் வாழ்கிறேன்..

பெண்: உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன்..
ஓ..தோள் சாய்கிறேன்..

ஆண்: விழியில் உன் விழியில்..
வந்து விழுந்தேன் அந்த நொடியில்..
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே..

பெண்: ஆ..வழியில் உன் வழியில்..
வந்து நடந்தேன் அந்த நொடியில்..
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே..

ஆண்: இதுவரை என் இருதயம் 
இந்த உணர்வினில் தடுமாறவில்லை..

பெண்: முதல்முறை இந்த இளமையின் சுகம் உணர்கிறேன்
நான் தூங்கவில்லை..

ஆண்: குடையோடு நான் போனேன்..
வழியினில் ஏனோ நனைகின்றேன்..

பெண்:  கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்..

ஆண்: என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய்..

ஆண்: விழியில் உன் விழியில்..
வந்து விழுந்தேன் அந்த நொடியில்..
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே..

பெண்: வழியில் உன் வழியில்..
வந்து நடந்தேன் அந்த நொடியில்..
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே..

ஆண்: சிரிப்பிலே உன் சிரிப்பிலே
சிறை அடைக்கிறாய் நான் மீளவில்லை..

பெண்: உறவுகள் ஒன்று சேர்கையில்..
என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை..

ஆண்: உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே..

பெண்: உரையாடல் தொடர்ந்தாலும் 
மௌனங்கள் கூட பிடிக்கிறதே..

ஆண்: என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய்..

ஆண்: விழியில் உன் விழியில் 
வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே..

பெண்: ம்..வழியில் உன் வழியில்..
வந்து நடந்தேன் அந்த நொடியில்..
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே..

ஆண்: உன்னோடு வாழ்ந்திட தானே நான் வாழ்கிறேன்..

பெண்: உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன்..
ஓ..தோள் சாய்கிறேன்..

ஆண்: விழியில் உன் விழியில்..
வந்து விழுந்தேன் அந்த நொடியில்..
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே..

..................

Songs lyrics from Greedam Movie: