MAY MADHAM
மே மாதம்
Movie: Shajahan
Singers: Devan ekambaram, Sujatha mohan
Music director: Mani sharma
ஆண்: மே மாத மேகம்..
என்னை நில் என்று சொல்ல பட பட..
பேசாத பெண்மை
என்னை பேர் சொல்லும் போது கால்கள் தட தட..
பெண்: ஆண் வாடை காற்று
என் ஆடைக்குள் மோத பட பட..
போர் செய்யும் பார்வை
என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட..
ஆண்: புன்னகை சொட்டு புன்னகை என்னை புலவனாய் மாற்றுதே..
பூமியும் அந்த வானமும் சின்ன புள்ளியாய் போனதே..
பெண்: கண்களே அந்த கண்களே எந்தன் கற்பினை தீண்டுதே..
பூவுக்கும் ஈட்டி வேலுக்கும் இன்று போர்க்களம் மூண்டதே..
ஆண்: சில நேரம் வேலும் வெல்லலாம்..
பல நேரம் பூவும் வெல்லலாம்..
அதுதானே காதல் யுத்தம் அன்பே..
பெண்: வென்றாலும் இனிமை காண்பதும்
தோற்றாலும் பெருமை காண்பதும் இங்கேதான் காணக்கூடும் அன்பே..
ஆண்: ஓ..மே மாத மேகம்..
என்னை நில் என்று சொல்ல பட பட..
மே மாத மேகம்..
என்னை நில் என்று சொல்ல..
பெண்: பறவைகள் பேசும் மொழிகளை காற்று அறியுமா இல்லையா..
கண்களால் பேசும் மொழிகளை காதல் அறியணும் இல்லையா..
ஆண்: மலைகளை கட்டி இழுப்பது எனக்கு சுலபம் தான் இல்லையா..
மனதிலே உள்ள காதலை இறக்கி வைப்பதே தொல்லையா..
பெண்: போ போ போ என்னும் சொல்லுக்கு..
வா வா வா என்று அர்த்தமே..
அதுதானே இங்கு மாறும் அன்பே..
ஆண்: ஆடைக்குள் மூடி நிற்கிறாய்..
அது கூட வேறு அர்த்தமா..
ஆஹாஹா புரிஞ்சு போச்சு அன்பே..
ஆண்: மே மாத மேகம்..
என்னை நில் என்று சொல்ல பட பட..
பேசாத பெண்மை..
என்னை பேர் சொல்லும் போது கால்கள் தட தட..
பெண்: ஆண் வாடை காற்று
என் ஆடைக்குள் மோத பட பட..
போர் செய்யும் பார்வை
என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட
ஆண்: மே மாத மேகம்..
என்னை நில் என்று சொல்ல..
மே மாத மேகம்..
என்னை நில் என்று சொல்ல..
