ACHACHO PUNNAGAI
அச்சச்சோ புன்னகை
Movie: Shajahan
Singers: Udit narayan, Kavitha krishnamoorthy
Music director: Mani sharma
ஆண்: அச்சச்சோ புன்னகை..
ஆள் தின்னும் புன்னகை..
கைக்குட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்து கொண்டேன்..
அச்சச்சோ புன்னகை..
ஆள் தின்னும் புன்னகை..
கைக்குட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்து கொண்டேன்..
பெண்: அச்சச்சோ புன்னகை..
அத்திப்பூ புன்னகை..
சிந்தாமல் சிதறாமல் முந்தானை ஏந்தி கொண்டேன்..
ஆண்: உன் புன்னகை..ஓ ஓ..
எனும் சாவியால்.. ஓ ஓ ..
உன் புன்னகை எனும் சாவியால் என் காதல் திறந்துகொண்டேன்..
அச்சச்சோ புன்னகை..ஓ..
ஆள் தின்னும் புன்னகை..ஓ..
கைக்குட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்து கொண்டேன்..
ஆண்: வார்த்தையில் காதலை சொன்னாய்..
என் வாலிபம் மலர்ந்ததடி..
உன்னை கலந்தபின் நான் சென்று குளித்தால்
கடல் குடிநீர் ஆகுமடி..
பெண்: கவிதை..ஓ..இது கவிதை..ஓ..
இன்னும் கற்பனை செய்வோமா
உயிரை இடம் மாற்றி நம் உதடுகள் சேர்ப்போமா..
ஆண்: அம்மம்மா நுனிவிரல் தொட்டே என் இதயம் பதறியதே..
ஆழங்கள் தொட என்னாகும் என் உயிரே சிதறியதே..
பெண்: நீ தீண்டினால்..ஓ ஓ..
உயிர் தூண்டினால்..ஓ ஓ ..
நீ தீண்டினால் உயிர் தூண்டினால்
நெஞ்சில் போக்ரான் வெடிக்கிறதே..
ஆண்: அச்சச்சோ புன்னகை..ஓ..
ஆள் தின்னும் புன்னகை..ஓ..
கைக்குட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்து கொண்டேன்..
பெண்: பெண்ணுக்குள் இத்தனை சுகமா..
அந்த பிரம்மனின் திறம் வாழ்க..
எனக்குள் தூங்கிய சுகத்தை இன்று எழுப்பிய விரல் வாழ்க..
ஆண்: அடியே..ஓ..
சுக வகையே. ..
இன்னும் ஆயிரம் கோடியடி கண்ணே..
கொஞ்சம் வளைந்தால்..
ஓ என் கற்பனை நீளுமடி..
பெண்: வெட்கத்தை உன் முத்தத்தால் நீ சலவை செய்துவிடு..
பெண் தேகம் ஒரு பேரேடு உன் பெயரை எழுதிவிடு..
ஆண்: இரு உதடுகள்..ஓ ஓ ..
என் எழுதுகோல்..ஓ ஓ ..
இரு உதடுகள் என் எழுதுகோல் வா அன்பே வளைந்துகொடு..
அச்சச்சோ புன்னகை..
ஆள் தின்னும் புன்னகை..
கைக்குட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்து கொண்டேன்..
பெண்: அச்சச்சோ புன்னகை..ஓஹோஹோ..
அத்திப்பூ புன்னகை..ஓஹோஹோ..
சிந்தாமல் சிதறாமல் முந்தானை ஏந்தி கொண்டேன்..
ஆண்: உன் புன்னகை..ஓ ஓ..
எனும் சாவியால்.. ஓ ஓ ..
உன் புன்னகை எனும் சாவியால் என் காதல் திறந்துகொண்டேன்..
..........................
Songs lyrics from shajahan movie: