CHELLA NAM VEETUKU
செல்லா நம் வீட்டுக்கு
Movie: Poovellam un vaasam
Singers: Malaysia vasudevan, sujatha mohan, harish ragavendra, sangeetha sajith
Music director: Vidyasagar
ஆண்: செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைச்சு நல்லாவே வண்ணம் அடிப்போம்..
பெண்: சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் சின்ன சின்ன செடி வளர்ப்போம்..
ஆண்: இது மாடி வீடு..
நம் ஜோடி வீடு..
அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு..
பெண்: ஆஆ..ஆஆ..ஆஆ...
ஓஓ..ஓஓஓ..ஓஓஓ....

பெண்: ஆஆ..ஆஆ..ஆஆஆ..ஆஆ...
ஆண்: ஓஓஓ..ஓ..ஓ..ஓஓஓ....
ஆண்: ஜன்னல் வழியே காற்றே வருக..
கதவு வழியே செல்வம் வருக..
வாஸ்து பார்த்தே வாசல் வைத்தோம் வாழ்க்கை செழிக்க..
பெண்: முன்னே காணும் புல்வெளி வாழ்க..
மொட்டை மாடி ரோஜா வாழ்க..
ஊமை தென்றல் ஓடி வரட்டும் ஊஞ்சல் அசைக்க..
ஆண்: எங்கள் இதயம் அடுக்கி வைத்து
இந்த இல்லங்கள் எழுந்ததம்மா..
பெண்: நீ சுவரில் காது வைத்தால்
மன துடிப்பு கேட்குமம்மா..
நம் சொந்தம் வளர்ந்திருக்க..
பந்தம் தொடர்ந்திருக்க..
தலைமுறை இருபது வாழும் நம் வீடு..
ஆஆ..ஆஆ..ஆஆ...ஆஆஆ
ஓஓ..ஓஓஓ...ஓஓஓ..ஓஓஓ..
ஆண்: செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைச்சு நல்லாவே வண்ணம் அடிப்போம்..
பெண்: சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் சின்ன சின்ன செடி வளர்ப்போம்..
ஆண்: வீடு மனைவி பிள்ளை எல்லாம்
எல்லாருக்கும் வாய்ப்பதில்லை
நன்மை செய்த நல்லவர்க்கெல்லாம் நன்றி சொல்கிறோம்..
ஆ&பெ: இன்னோர் ஜென்மம் ஒன்று இருந்தால்
இங்கே ஒரு நாய்க்குட்டியாக
வந்து வாழும் வரமே வேண்டும் உம்மை
கேட்கிறோம்..
பெண்: இந்த வீடு வந்த நேரம்
மழை பொன்னாய் பொழிந்ததம்மா..
அந்த மாலை நிழலை போல பந்தபாசம் வளருதம்மா..
ஆ& பெ: இந்த சொந்தம் நெருங்கி வர..
சொர்க்கம் அருகில் வர..
சூரியன் உள்ளவரை வாழிய நம் வீடு..
ஆஆ..ஆஆ..ஆஆ...ஆஆஆ
ஓஓ..ஓஓஓ...ஓஓஓ..ஓஓஓ..
ஆண்: செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைச்சு நல்லாவே வண்ணம் அடிப்போம்..
பெண்: சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் சின்ன சின்ன செடி வளர்ப்போம்..
ஆண்: இது மாடி வீடு..
பெண்: நம் ஜோடி வீடு..
ஆண்: அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு..
ஆ& பெ: ஆஆ..ஆஆ..ஆஆ...
ஓஓ..ஓஓஓ..ஓஓஓ....
....................
Songs lyrics from Poovellam un vaasam Movie: