KADHAL VANDHADHUM
காதல் வந்ததும்
Movie: Poovellam un vaasam
Singers: K.J.Yesudas, Sadhana sargham
Music director: Vidyasagar
பெண்: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை..
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை..
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை..
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை..
நெஞ்சே..என் நெஞ்சே.. செல்லாயோ அவனோடு..
சென்றால் வர மாட்டாய்..அதுதானே பெரும்பாடு..
தந்நந் நானன..தந்நந் நானன..
தந்நந் நானன..தந்நந் நானன..
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை..
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை..ஆ.....
பெண்: தூங்காத காற்றே.. துணை தேடி ஓடி..
என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா..
ஆண்: நில்லாத காற்று சொல்லாது தோழி..
நீயாக உந்தன் காதல் சொல்வாயா..
பெண்: உள்ளே என்னால் அரும்பானது..
உன்னால் இன்று ருதுவானது..
ஆண்: நான் அதை சோதிக்கும் நாள் வந்தது..
தந்நந் நானன..
பெண்: தந்நந் நானன..
ஆண்: தந்நந் நானன..
பெண்:தந்நந் நானன..
ஆண்:தந்நந் நானன..
பெண்: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை..
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை..
பெண்: நீ வந்து போனால் என் தோட்டமெங்கும்..
உன் சுவாச வாசம் வீசும் பூவெல்லாம்..
ஆண்: நீ வந்து போனால் என் வீடு எங்கும் உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்..
பெண்: கனா வந்தால் மெய் சொல்கிறாய்..
கண்ணில் கண்டால் பொய் சொல்கிறாய்..
ஆண்: போ என்னும் வார்த்தையால் வா என்கிறாய்..
பெண்: தந்நந் நானன..
ஆண்: தந்நந் நானன..
பெண்: தந்நந் நானன..
ஆண்: தந்நந் நானன..
பெண்: தந்நந் நானன..
ஆண்: தந்நந் நானன..
பெண்: தந்நந் நானன
ஆண்: தந்நந் நானன..
பெண்: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை..
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை..
நெஞ்சே.. என் நெஞ்சே.. செல்லாயோ அவனோடு..
சென்றால் வர மாட்டாய் அது தானே பெரும்பாடு..
தந்நந் நானன..தந்நந் நானன..
தந்நந் நானன..தந்நந் நானன.
..........
Song lyrics from Poovellam un vaasam movie:-