SONDHA KURALIL PAADA
சொந்த குரலில் பாட
Movie: Amarkalam
Singer: Shalini
Music director: Bharadwaj
ம்ம்ம்ம்.. சொந்த குரலில் பாட..
ம்ம்ம்ம்.. ரொம்ப நாளா ஆசை..
ஹலோ சுசீலா ஆன்டி..
ஹலோ ஜானகி ஆன்டி..
குயில் பாட்டுச் சித்ரா..
எல்லோரும் என்னை மன்னியுங்கள்..
ம்ம்ம்ம்.. சொந்த குரலில் பாட..
ம்ம்ம்ம்.. ரொம்ப நாளா ஆசை..
காற்றிலேறி பாட்டுப் பாட போகிறேன்..
ஒரு கானம் பாடி வானம்பாடி ஆகிறேன்..
வெண்ணிலாவில் தண்ணீர் உண்டு கேட்கிறேன்..
நிலாவில் சென்று நீர் அருந்தப் போகிறேன்..
மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன்..
முந்நூறு ஆண்டு இளமை வாங்கப் போகிறேன்..
ம்ம்ம்ம்.. சொந்த குரலில் பாட..
ம்ம்ம்ம்.. ரொம்ப நாளா ஆசை..
இந்த பூமி பழைய பூமி அல்லவா..
ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டுவா..
ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா..
ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா..
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டுவா..
அங்கு உறங்கவைக்கும் எந்தன் பாடல் அல்லவா..
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டுவா..
அங்கு உறங்கவைக்கும் எந்தன் பாடல் அல்லவா..
ம்ம்ம்ம்.. சொந்த குரலில் பாட..
சொந்த குரலில் பாட..
ம்ம்ம்ம்.. ரொம்ப நாளா ஆசை..
ரொம்ப நாளா ஆசை..
ஹலோ சுசீலா ஆன்டி..
ஹலோ ஜானகி ஆன்டி..
குயில் பாட்டுச் சித்ரா..
எல்லோரும் என்னை மன்னியுங்கள்..
.................
Songs lyrics from Amarkalam movie:-
