KAALAM KALIKAALAM-MAHA GANAPATHI
காலம் கலி காலம்- மஹா கணபதி
Movie: Amarkalam
Singers: Srinivas
Music director: Bharadwaj
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா..
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா..
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது..
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது..
டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும்..
நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்..
பொய்யும் சத்தியம் செய்யும்..
இந்த பூமி எப்படி உய்யும்..
இதப் பாக்க பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது..
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது..
மகாகணபதி..
மகாகணபதி..
மகாகணபதி..
மகாகணபதி..
கண்ணகிக்குக் கோயில் கட்டும் கற்பு மிக்க நாடிது..
கற்புன்னா எத்தன லிட்டர் புது பொண்ணு கேட்குது..
அட சேல பாவாட அது மலையேறிப் போச்சு..
மிடியோடு சுடிதாரும் பொது உடையாகி போச்சு..
போலிப் புண்ணாக்கு பள்ளி எதுக்கு..
டிடி தந்தாலே பட்டம் இருக்கு..
அட ஏட்டில் உள்ளது ஒழுக்கம்
அது ரோட்டில் வந்ததும் வழுக்கும்..
இதப் பாக்க பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது..
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது..
மகாகணபதி..
மகாகணபதி..
அண்ணனுக்கு ஜே.. காதல் மன்னனுக்கு ஜே..
மறத் தமிழனுக்கு ஜே..
நம்ம தலைவனுக்கு ஜே ஜே..
தலைவனுக்கு ஜே ஜே..
தலைவனுக்கு ஜே ஜே..
திரையில பொய்கள சொன்னா சாதிசனம் நம்புது..
கருத்துள்ள கவிஞன் சொன்னா காத தூரம் ஓடுது..
அட சத்துள்ள தானியம் அது காணாமப் போச்சு..
வெறும் பொக்குள்ள உள்ள அரிசி பொது உணவாகிப் போச்சு..
பாசம் கண்ணீரு பழைய தொல்ல
தாயே செத்தாலும் அழுவதில்ல..
அட ஏழு குண்டல வாடா..
இது இன்னைக்குத் திருந்தும் நாடா..
இதப் பாக்க பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது..
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது..
மகாகணபதி..
மகாகணபதி..
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா..
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா..
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது..
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது..
டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும்
நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்
பொய்யும் சத்தியம் செய்யும்..
இந்த பூமி எப்படி உய்யும்..
இதப் பாக்க பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது..
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது..
மகாகணபதி..
மகாகணபதி..
மகாகணபதி..
மகாகணபதி..
...............
Songs lyrics from Amarkalam movie:-