PULARUM VAAZHVIN
புலரும் வாழ்வின்
Movie: Dharala prabhu
Singers: Yazin nizar
Music director: Vivek-mervin
புலரும் வாழ்வின் முதலாம் நாள் இதுவோ..
உலரும் நாளில் மழை தூறிடும் ருதுவோ..
மனதை சூழும் நோய்நீக்கும் ஒளியாய் வந்தாயே..
மழலைச் சொல்லில் வாழ்க்கைக்கே அர்த்தம் தந்தாயே..
மீண்டும் மீண்டும் இந்த நாட்கள் வேண்டும் இனி இனி இனி
போதும் போதும் இந்த இன்பம் போதும் அடி இனி இனி..
காற்றில் நீ கையசைத்தால் ஓவியம் தோன்றுதே..
கிறுக்கிடும் சுவர்கள் எல்லாம் கவிதை ஆகுதே..
நான் உன்னை தோளில் தூக்க பாரங்கள் தீருதே..
நாளையும் வாழ வேண்டும் ஆசை தூண்டுதே..
வேற்யாரு என்ற போதும் என் அன்பு ஒன்று ஏராளமா ஏராளமா
உன் தாய் என்று உறவாட என் தாரம் தாராளமா..
வீடு என்ற ஒன்றின்று உயிர் கொண்டது உன் மூலமா
நீ தந்த ஆனந்தம் பார் எந்தன் கண்ணோரமா..
மீண்டும் மீண்டும் இந்த நாட்கள் வேண்டும் இனி இனி இனி
போதும் போதும் இந்த இன்பம் போதும் அடி இனி இனி..
மீண்டும் மீண்டும் இந்த நாட்கள் வேண்டும் இனி இனி இனி
போதும் போதும் இந்த இன்பம் போதும் அடி இனி இனி..
புலரும் வாழ்வின் முதலாம் நாள் இதுவோ..
உலரும் நாளில் மழை தூறிடும் ருதுவோ..
.................
Songs lyrics from Dharalaprabhu movie:-