ORU OORIL

 ஒரு ஊரில் அழகே உருவாய்


Movie: Kaakha kaakha

Singers: Karthik 

Music director: Harris jayaraj 


She is a fantasy..
ஷன நான நானா ஓ.. ஓ ..
Sweet as a harmony..
ஷன நான நானா ஓ.. ஓ ..ஓ..
No one knows she is a mystery..
ஷன நான நானா ஓ.. ஓ ..ஓ..
Fills your heart with ecstasy..
ஓஹூ..ஓஹூ..யேஹி..யேஹே..

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே..
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே..
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே..
பல வருடம் பரிட்சியம் போலிருக்கும்..
எதிலும் வாஞ்சைகள் தானிருக்கும்..
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே..
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே..

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே..
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே..

மரகத சோம்பல் முறிப்பாளே..
புல்வெளி போலே சிலிர்ப்பாளே..
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே..
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே..
அவள் கன்னத்தின் குழியில்..
சிறு செடிகளும் நடலாம்..
அவள் கன்னத்தின் குழியில்..
அழகழகாய்..
சிறு செடிகளும் நடலாம்..
விதவிதமாய்..
ஏதோ ஏதோ தனித்துவம் அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே..

ஒரு ஊரில் அழகே அழகே..
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே..
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே..

மகரந்தம் தாங்கும் மலர் போலே..
தனியொரு வாசம் அவள் மேலே..
புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழைகள்..
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்..
அவள் கடந்திடும் போது ..
தலை அனிச்சையாய் திரும்பும்..
அவள் கடந்திடும் போது ..
நிச்சயமாய்..
தலை அனிச்சையாய் திரும்பும்..
அவள் புறமாய்..
என்ன சொல்ல.. என்ன சொல்ல..
இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே..

No one knows she is a mystery..
ஷன நான நானா ஓ.. ஓ ..ஓ..
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே..
பார்க்கையிலே..
பல வருடம் பரிட்சியம் போலிருக்கும்..
போலிருக்கும்..
எதிலும் வாஞ்சைகள் தானிருக்கும்..
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே..
முதல் முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே..



...............



Songs lyrics from kaakha kaakha movie:-