KANDUKONDEN KANDUKONDEN
கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்
Movie: Kandukonden kandukonden
Singers:Hariharan, Mahalakshmi iyer
Music director: A.r.rahman
ஆண்: கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்..
காதல் முகம் கண்டுகொண்டேன்..
கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்..
காதல் முகம் கண்டுகொண்டேன்..
விரல் தொடும் தூரத்திலே..ஏ..
வெண்ணிலவு கண்டுகொண்டேன்..
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி..
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால்
உயிரை உடைப்பாள் ஒருத்தி..
பெண்: என் கண் பார்த்தது என் கை சேருமோ..
ஆண்: கை சேராமலே கண்ணீர் சேருமோ..
பெண்: கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்..ஏ..
காதல் முகம் கண்டுகொண்டேன்..ஏ..
ஆண்: மலர் மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா..
பெண்: உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா ..
ஆண்: உன் தனிமை கதவின் தாழ் நீக்கவா..
பெண்: கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்..
காதல் முகம் கண்டுகொண்டேன்..
பெண்: மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்..
பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்..
ஆண்: கண்களை திறந்துன் கனவுகள் வளர்க்கும்..
காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும்..
பெண்: உன்னை தேடியே இனி எனது பயணமோ..
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ..
ஆண்: ஏ..கனவு மங்கையே..
உனது மனது எனது மனதில் இணையுமோ
பெண்: கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்..
காதல் முகம் கண்டுகொண்டேன்..
ஆண்: விரல் தொடும் தூரத்திலே..
வெண்ணிலவு கண்டுகொண்டேன்..
ஆண்: ஆ..நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது..
உயிரின் தேடல் கடைசியில் உனை காண்பது..
பெண்: கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்..
நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும்..
ஆண்: நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன்..
எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன்..
பெண்: ஏ..காதல் தேவனே..
எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்..
ஆண்: கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்..
பெண்: கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்..
ஆண்: காதல் முகம் கண்டுகொண்டேன்..
பெண்: காதல் முகம் கண்டுகொண்டேன்..
ஆண்: விரல் தொடும் தூரத்திலே..
பெண்: விரல் தொடும் தூரத்திலே..
ஆண்: வெண்ணிலவு கண்டுகொண்டேன்..
பெண்: கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் ..
ஆண்: காதல் முகம் கண்டுகொண்டேன்..
...............
Songs lyrics from kandukonden kandukonden movie:-
