KADHAIGALAI PESUM

 கதைகளை பேசும்


Movie:  Angadi theru 

Singers: Benny dayal, Hamsika iyer

Music director: G.V.Prakash kumar 


ஆண்: கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
ஓ..கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே

பெண்: ஓ.. இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே

ஆண்: கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

பெண்: கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா

ஆண்: உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய நொடியல்லவா

பெண்: கல்லும் மண்ணும் ஓ.. வீடுகளில்லை

ஆண்: ஓ..அன்பின் வீடே ஓ.. அழிவது இல்லை

பெண்: வெறும் கரையில் படுத்துக்கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா

ஆண்: உன் மடியில் இருந்தால்
வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி

ஆண்: ஓ..கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே


பெண்: உனக்குள் தொடங்கி உனக்குள் தானே
எந்தன் உலகம் முடிகிறதே

ஆண்: உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே

பெண்: ஓ.. இரவின் மடியில் ஓ.. குழந்தைகள் ஆவோம்

ஆண்:  ஓ.. இருட்டில் நதியில் ஓ.. இறங்கி போவோம்

பெண்: நேற்றென்னும் சோகம்
நெருப்பாய் வந்து தீ மூட்டும்

ஆண்: இன்றென்னும் மழையில்
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே

ஆண்: ஓ..கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே

பெண்: ஓ.. இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே

ஆண்: ஓ.. என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே

பெண்: ஓ..இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே



................



Songs lyrics from angadi theru movie:-