UN PERAI SOLLUMBODHE
உன் பேரை சொல்லும்போதே
Movie: Angadi theru
Singers: Shreyaghoshal, Naresh iyer, haricharan
Music director: G.V.Prakash kumar
ஆண்: உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்..
நீ பார்க்கும் போதே மழை ஆவேன்..ஓ...
உன் அன்பில் கண்ணீர்துளி ஆவேன்..
நீ இல்லை என்றால் என்னாவேன்..
ஓ...நெருப்போடு வெந்தே மண்ணாவேன்..
பெண்: உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்..
நீ இல்லை என்றால் என்னாவேன்..
ஓ...நெருப்போடு வெந்தே மண்ணாவேன்..
..........
ஆண்: நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்..
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்..
பெண்: நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்..
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்..
ஆண்: என் உலகம் தனிமை காடு..
நீ வந்தாய் பூக்களோடு..
இனி தொடரும் கனவுகளோடு.. பெண்ணே..பெண்ணே..
.........
பெண்: நீ இல்லை என்றால் என்னாவேன்..
ஓ..நெருப்போடு வெந்தே மண்ணாவேன்..
ஆண்: உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்..
பெண்: நீ பார்க்கும் போதே மழை ஆவேன்..ஓ...
ஆண்: உன் அன்பில் கண்ணீர்துளி ஆவேன்..
பெண்: நீ இல்லை என்றால் என்னாவேன்..ஓ...
ஆண்: நெருப்போடு வெந்தே மண்ணாவேன்..
........
ஆண்: உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்..
உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்..
பெண்: உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்..
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்..
ஆண்: உன் காதல் ஒன்றை தவிர..என் கையில் ஒன்றும் இல்லை..
அதை தாண்டி ஒன்றுமே இல்லை.. பெண்ணே.. பெண்ணே..
..........
ஆண்: நீ இல்லை என்றால் என்னாவேன்..ஓ..
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்..
ஆ&பெ: உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்..
நீ பார்க்கும் போதே மழை ஆவேன்..ஓ...
உன் அன்பில் கண்ணீர்துளி ஆவேன்..
நீ இல்லை என்றால் என்னாவேன்..
ஓ...நெருப்போடு வெந்தே மண்ணாவேன்..
.........
Songs lyrics from angadi theru movie:-
