CHUDIDHAR ANINDHU
சுடிதார் அணிந்து
Movie: Poovellam ketu par
Singers: Hariharan, sadhana sargham
Music director: Yuvan Shankar raja
ஆண்: சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..
என் மீது காதல் வந்தது..
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா..
நீ சொல்வாயா..
நீ சொல்வாயா..
பெண்: விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது..
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது..
முழு காதல் என்று வந்தது தெரியாதே..
அது தெரியாதே..
அது தெரியாதே..
ஆண்: உன் மேல் நான் கொண்ட காதல்..
என் மேல் நீ கொண்ட காதல்..
எதை நீ உயர்வாக சொல்வாயோ..
பெண்: போடா பொல்லாத பையா..
நம்மேல் நாம் கொண்ட காதல்..
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா..
ஆண்: சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..
என் மீது காதல் வந்தது..
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா..
ஆண்: உன் பேரை சொன்னாலே..
நான் திரும்பி பார்க்கிறேன்..
பெண்: உன் பேரை மட்டும் தான் நான் விரும்பி கேட்கிறேன்..
ஆண்: இருவர் ஒருவராய் இணைந்துவிட்டோம்..
இரண்டு பெயர் ஏனடி..
பெண்: உனக்குள் என்னை நான் கரைத்துவிட்டேன்..
உன்னையே கேளு நீ..
ஆண்: அடி உன்னை நான் மறந்த வேளையில்..
உன் காதல் மாறுமா..
பெண்: விடிகாலை தாமரை பூவிது..
விண்மீனை பார்க்குமா..
ஆண்: உன் மேல் நான் கொண்ட காதல்..
என் மேல் நீ கொண்ட காதல்..
எதை நீ உயர்வாக சொல்வாயோ..
பெண்: போடா பொல்லாத பையா..
நம்மேல் நாம் கொண்ட காதல்..
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா..
ஆண்: சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..
என் மீது காதல் வந்தது..
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா..
பெண்: பலகோடி பெண்களிலே எதற்கென்னை தேடினாய்..
ஆண்: நான் தேடும் பெண்ணாக நீதானே தோன்றினாய்..
பெண்: நரை கூடும் நாட்களிலே என்னை கொஞ்ச தோன்றுமா..
ஆண்: அடி போடி காதலியே.. நரை கூட தோன்றுமா..
பெண்: உன் கண்ணில் உண்டான காதலிது..
மூடிவிடும் எண்ணமோ..
ஆண்: என் நெஞ்சில் உண்டான காதலிது..
நெஞ்சை விட்டு போகுமோ..
ஆண்: உன் மேல் நான் கொண்ட காதல்..
என் மேல் நீ கொண்ட காதல்..
எதை நீ உயர்வாக சொல்வாயோ..
பெண்: போடா பொல்லாத பையா..
நம்மேல் நாம் கொண்ட காதல்..
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா..
ஆண்: சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..
என் மீது காதல் வந்தது..
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா..
நீ சொல்வாயா..
நீ சொல்வாயா..
பெண்: விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது..
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது..
முழு காதல் என்று வந்தது தெரியாதே..
அது தெரியாதே..
அது தெரியாதே..
................
Songs lyrics from Poovellam ketu paar movie:-
