KANA KAANUM KALANGAL

 கனா காணும் காலங்கள் 


Movie: 7G rainbow colony 

Singers: harish ragavendra, srimadhumitha

Music director:Yuvan Shankar raja 


பெண்: கனா காணும் காலங்கள்..
கரைந்தோடும் நேரங்கள்..
கலையாத கோலம் போடுமோ..ஓஓ...
விழி போடும் கடிதங்கள்..
வழி மாறும் பயணங்கள்..
தனியாக ஓடம் போகுமோ..

ஆண்:  இது இடைவெளி குறைகிற தருணம்..
இரு இதயத்தில் மெல்லிய சலனம்..
இனி இரவுகள் இன்னொரு நரகம்..
இளமையின் அதிசயம்..

பெண்:  இது கத்தியில் நடந்திடும் பருவம்..
தினம் கனவினில் அவரவர் உருவம்..
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்..
கடவுளின் ரகசியம்..

ஆ&பெ:  உலகில் மிக இனித்திடும் பாஷை..
இதயம் ரெண்டும் பேசிடும் பாஷை..
மெதுவாய் இனி மழை வரும் ஓசை..ஆ....

ஆண்: கனா காணும் காலங்கள்..
கரைந்தோடும் நேரங்கள்..
கலையாத கோலம் போடுமோ..ஓஓ...
விழி போடும் கடிதங்கள்..
வழி மாறும் பயணங்கள்..
தனியாக ஓடம் போகுமோ..

பெண்: நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை..
நான் வேறு நீ வேறென்றால் நட்பு என்று பேரில்லை..

ஆண்:  பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை..
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை..

தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ..
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ..

பெண்:  தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்..
தோழமையில் அது கிடையாதே..
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்..
தடுத்திடவே இங்கு வழி இல்லையே..

ஆண்: ஆஆஆ...ஆஆ..ஆ
கனா காணும் காலங்கள்..
கரைந்தோடும் நேரங்கள்..
கலையாத கோலம் போடுமோ..

பெண்:  விழி போடும் கடிதங்கள்..
வழி மாறும் பயணங்கள்..
தனியாக ஓடம் போகுமோ..

ஆண்:  இது என்ன காற்றில் இன்று ஈரப்பதம் குறைகிறதே..
ஏகாந்தம் பூசி கொண்டு அந்திவேளை அழைக்கிறதே..
அதிகாலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே..
விழிமூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே..

பெண்: நடைபாதை கடையில்.. உன் பெயர் படித்தால்..
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்..

ஆ&பெ: படபடப்பாய் சில கோபங்கள் தோன்றும்..
பனித்துளியாய் அது மறைவது ஏன்..
நிலநடுக்கம் அது கொடுமைகள் இல்லை..
மனநடுக்கம் அது மிக கொடுமை..

பெண்: ஆஆஆஆ.ஆஆஆஆ...
 கனா காணும் காலங்கள்..
கரைந்தோடும் நேரங்கள்..
கலையாத கோலம் போடுமோ..ஓஓ...
விழி போடும் கடிதங்கள்..
வழி மாறும் பயணங்கள்..
தனியாக ஓடம் போகுமோ..