KAADU THIRANDHE
காடு திறந்தே
Movie: Vasool raja M.B.B.S
Singer: Hariharan, Sadhana sargham
Music director: Bharadwaj
ஆண்: காடு திறந்தே கிடக்கின்றது..
காற்று மலர்களை புடைக்கின்றது..
காடு திறந்தே கிடக்கின்றது..
காற்று மலர்களை புடைக்கின்றது..
கண்கள் திறந்தே கிடக்கின்றது..
காதல் உயிர்களை உடைக்கின்றது..
அடடா...நெஞ்சில் வரும் காதல் வலி..
பூவில் ஒரு சூறாவளி..ஓ..ஓ..ஓ
பெண்: நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று..
தொண்டைக்குள் சூள் கொண்டதோ..
ஆண்: உன்னை விட்டு உடல் மீளவில்லை..
என் கால்கள் வேர் கொண்டதோ..
பெண்: பூமிக்கு வந்த பனித்துளி நான்..
சூரியனே என்னை குடித்து விடு..
ஆண்: யுகம் யுகமாய் நான் எரிந்துவிட்டேன்..
பனித்துளியே என்னை அணைத்துவிடு..
உறவே..உயிரே..உணர்வே....
நெஞ்சில் வரும் காதல் வலி..
பூவில் ஒரு சூறாவளி..ஓ..ஓ..ஓ
ஆண்: சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி..
பேரின்பம் நாம் அடைவோம்..
பெண்: கால் தடங்கள் அற்ற பூமியிலே..
காற்றாக நாம் நுழைவோம்..
ஆண்: சித்திரை மாதத்தை நான் நனைத்து..
கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்..
பெண்: மார்கழி மாதத்தை நான் எரித்து..
முன்பனி காலத்தில் அனல் கொடுப்பேன்..
ஆண்: அடியே...சகியே....சுகியே...
நெஞ்சில் வரும் காதல் வலி..
பூவில் ஒரு சூறாவளி..ஓ..ஓஓ..ஓ
பெண்: காடு திறந்தே கிடக்கின்றது..
காற்று மலர்களை புடைக்கின்றது..
கண்கள் திறந்தே கிடக்கின்றது..
காதல் உயிர்களை உடைக்கின்றது..
ஆண்: அடடா..நெஞ்சில் வரும் காதல் வலி..
பூவில் ஒரு சூறாவளி..ஓ..ஓஓ..ஓ
....................
Songs lyrics from Vasool raja MBBS movie:
