KURUMUGIL
குருமுகில்
Movie: Seetha ramam
Singers: Sai vignesh
Music director: vishal chandrasekhar
குறு முகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்..
மழை கொண்டு கவிதை தீட்டினார்..
இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார்..
சிரித்திடும் சிலையை காட்டினார்..
எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை..
இருதயம் சுமந்து போகுதே இனிக்கிற காதல் ஒன்றினை..
என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரமே ஏற்றி வைத்ததார்..
குயில் மயில் குயில் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார்..
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலாவை கூட்டி வந்ததார்..
கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சம் கொண்டு
எழுதா ஓர் உவமை நீ..
வர்ணம் சேர்க்கும் போது வர்மன் போதை கொள்ள
முடியா ஓவியமும் நீ..
எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதல் உரும்..
உயிரே இல்லாத கல் கூட காமமுரும்..
உன் மீது காதல் கொண்ட மானுடன் தான் என்ன ஆகுவான்..
குயில் மயில் குயில் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார்..
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலாவை கூட்டி வந்ததார்..
உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும்..
அழகால் என்னை கொல்கிறாய்..
அருவி கால்கள் கொண்டு ஓடை இடையென்றாகி..
கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்..
கடலில் மீனாக நானாக ஆணையிடு..
அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்த வீடு..
பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்..
குயில் மயில் குயில் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார்..
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலாவை கூட்டி வந்ததார்..