KAN MOODI THIRAKKUM BODHU
கண் மூடி திறக்கும்போது
Movie: Sachin
Singers: Devi sri prasad
Music director: Devi Sri Prasad
கண்மூடி திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல..
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே..
குடையில்லா நேரம் பார்த்து கொட்டிப் போகும் மழையை போல..
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே..
தெருமுனையை தாண்டும் வரையில் வெறும் நாள் தான் என்றிருந்தேன்..
தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்..
அழகான விபத்தில் இன்று ஐயோ நான் மாட்டிக் கொண்டேன்..
தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்றேன்..ஓஓஓ...ஓஓஓஓ...
உன் பேரும் தெரியாது உன் ஊரும் தெரியாது
அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா..
நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்க்கின்றேன்..
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா..
உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா..
இதயத்தில் மலையின் எடையை உணர்கின்றேன் காதல் இதுவா..
கண்மூடி திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல..
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே..
வீதி உலா நீ வந்தால் தெரு விளக்கும் கண்ணடிக்கும்..
வீடு செல்ல சூரியனும் அடம் பிடிக்குமே..
நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காய்ச்சல் வரும்..
உன்னை தொட்டு பார்க்க தான் மழை குதிக்குமே..
பூகம்பம் வந்தால் கூட..ஓ..ஓ.. பதறாத நெஞ்சம் எனது..ஓ...
பூ ஒன்று மோதியதாலே..ஓ..ஓ...
பட்டென்று சரிந்தது இன்று..ஓ..ஓ..
கண்மூடி திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல..
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே..
குடையில்லா நேரம் பார்த்து கொட்டிப் போகும் மழையை போல..
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே..