UYIRE UYIRE AZHAITHADHENNA
உயிரே உயிரே
Movie: Uyirile kalandhadhu
Singers: Hariharan, Sujatha
Music director: Deva
பெண்: உயிரே உயிரே அழைத்ததென்ன..
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன..
உயிரே உயிரே அழைத்ததென்ன..
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன..
உயிரே உயிரே அழைத்ததென்ன..
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன..
உன் கீதம் எந்தன் காதில் விழுமா..
உன் வானம் எந்தன் பக்கம் வருமா..
கங்கை எந்தன் வாசல் வருமா..
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா..
உயிரே உயிரே அழைத்ததென்ன..
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன..
ஆண்: நீ தோன்றினாய் அடி வானமாய்..
நான் வந்ததும் தொலைவாகினாய்..
பெண்: கண் மூடினேன் மெய் தீண்டினாய்..
கை நீட்டினேன் கனவாகினாய்..
ஆண்: மழை சாலையில் குமிழாகினாய்..
விரல் தீண்டினேன் உடைந்தோடினாய்..
பெண்: என் தூரத்து விண்மீனே..
கை ஓரத்தில் வருவாயா..
என்னை ஒருமுறை தொடுவாயா.. உயிரே..
ஆண்: உயிரே உயிரே அழைத்ததென்ன..
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன..
பெண்: காற்றெங்கிலும் உன் கீர்த்தனை..
கண்ணீரிலே ஆராதனை..
ஆண்: என் தோட்டத்தில் உன் வாசனை..
என் ஜீவனில் உன் வேதனை..
பெண்: நான் தேடினேன் என் கண்ணனை..
புயல் சூழ்ந்ததே என் கண்களை..
ஆண்: நான் வேறெங்கும் மறையவில்லை..
என் வேர் என்றும் அழிவதில்லை..
உன் வானம் முடிவதில்லை..உறவே..
பெண்: உயிரே உயிரே அழைத்ததென்ன..
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன..
உயிரே உயிரே அழைத்ததென்ன..
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன..
ஆண்: உன் கீதம் எந்தன் காதில் விழுமா..
உன் வானம் எந்தன் பக்கம் வருமா..
கங்கை எந்தன் வாசல் வருமா..
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா..
