YAARO YAARUKUL YAARO - FRIENDSHIP
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
Movie: Chennai 600028
Singers: S.P.B.Charan, Venkat prabhu
Music director: Yuvan shankar raja
யாரோ யாருக்குள் இங்கு யாரோ..
யார் என்று கண்டு யார் சொல்வாரோ..
கடல் கொண்ட மழை நீரை..
இனம் காண முடியாது..
யாரோ யாருக்குள் இங்கு யாரோ..
யார் என்று கண்டு யார் சொல்வாரோ..
கடல் கொண்ட நதி நீரை..
அடையாளம் தெரியாது..
உண்ணும் சோறு நூறாகும்..
ஒன்றுக்கொன்று வேறாகும்..
உப்பில்லாமல் என்னாகும்..
உப்பை போல நட்பை எண்ணுவோம்..
யாரோ யாருக்குள் இங்கு யாரோ..
யார் என்று கண்டு யார் சொல்வாரோ..
கடல் கொண்ட நதி நீரை..
அடையாளம் தெரியாது..
வார் ஷிப் என்றும் நீரில் ஓடும்..
ஸ்பேஸ் ஷிப் என்றும் வானில் ஓடும்..
ஃப்ரெண்ட்ஷிப் ஒன்றுதான் என்றும் நெஞ்சில் ஓடுமே..
ஓ..ஓ..ஃப்ரெண்ட்ஷிப் என்றும் தெய்வம் என்று..
வொர்ஷிப் செய்வோம் ஒன்றாய் நின்று..
ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயில் ஆகுமே..
ஒருவர் மீது ஒருவர் இங்கு காதல் கொண்டு வாழ்கின்றோம்..
காதல் என்றால் கொச்சையாக அர்த்தம் செய்ய கூடாது நண்பா வா.. ஏ..ஏ..
யாரோ யாருக்குள் இங்கு யாரோ..
யார் என்று கண்டு யார் சொல்வாரோ..
கடல் கொண்ட மழை நீரை..
இனம் காண முடியாது..
எங்கும் திரியும் இளமை தீயை..
என்றும் எரியும் இனிமை தீயை..
தண்ணீர் அவிக்குமா வீசும் காற்றும் அணைக்குமா..
ஓ..ஓ..என்னை கண்டா தன்னந்தனியா எட்டி போகும் சிக்குன்குனியா..
எங்கும் செல்லுவோம் நாங்கள் என்றும் வெல்லுவோம்..
நாட்டில் உள்ள கூட்டணி போல் நாங்கள் மாற மாட்டோமே..
நட்பு என்னும் சத்தியத்தை நாங்கள் மீற மாட்டோமே நண்பா வா..ஏ.ஏ..
யாரோ யாருக்குள் இங்கு யாரோ..
யார் என்று கண்டு யார் சொல்வாரோ..
கடல் கொண்ட மழை நீரை..
இனம் காண முடியாது..
