YAARO YAARUKUL INGU YAARO
யார் யாருக்குள் இங்கு யாரோ
Movie: Chennai 600028
Singers: S.P.Balasubramaniam, K.S.Chithra
Music director: Yuvan shankar raja
ஆண்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ..
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ..
விடை இல்லா ஒரு கேள்வி..
பெண்: உயிர் காதல் ஒரு வேள்வி..
ஆண்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ..
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ..
விடை இல்லா ஒரு கேள்வி..
பெண்: உயிர் காதல் ஒரு வேள்வி..
ஆண்: காதல் வரம் நான் வாங்க..
கடை கண்கள் நீ வீச..
கொக்கை போல நாள்தோறும் ஒற்றை காலில் நின்றேன் கண்மணி..
பெண்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ..
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ..
விடை இல்லா ஒரு கேள்வி..
ஆண்: உயிர் காதல் ஒரு வேள்வி..
பெண்: ஊரை வெல்லும் தோகை நானே..
உன்னால் இன்று தோற்று போனேன்..
கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே..
ஆண்: ஓ..ஓ..நின்றாய் எங்கு மின்னல் கீற்றா..
நித்தம் வாங்கும் மூச்சு காத்தா..
உன்னை சூழ்கிறேன் நான் உன்னை சூழ்கிறேன்..
பெண்: காற்றில் வைத்த சூடம் போல காதல் தீர்ந்து போகாது..
ஆண்: உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி என்னால் வாழ ஆகாது அன்பே வா..ஏ..ஏ..
ஆண்: யாரோ
பெண்: யாருக்குள் இங்கு யாரோ..
ஆண்: யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ..
பெண்: விடை இல்லா ஒரு கேள்வி..
ஆண்: உயிர் காதல் ஒரு வேள்வி..
ஆண்: உந்தன் ஆடை காய போடும்..
உங்கள் வீட்டு கம்பி கொடியாய்...
என்னை எண்ணினேன் நான் தவம் பண்ணினேன்..
பெண்: ஆ..ஆ.. கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி..
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி..
எட்டி போய் விடு இல்லை ஏதோ ஆய்விடும்..
ஆண்: காதல் கொண்டு பேசும் போது சென்னை தமிழும் செந்தேன் தான்..
பெண்: ஆசை வெள்ளம் பாயும் போது வங்க கடலும் வாய்க்கால் தான் அன்பே வா..ஆ..
ஆண்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ..
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ..
விடை இல்லா ஒரு கேள்வி..
பெண்: உயிர் காதல் ஒரு வேள்வி..
ஆண்: காதல் வரம் நான் வாங்க..
கடை கண்கள் நீ வீச..
கொக்கை போல நாள்தோறும் ஒற்றை காலில் நின்றேன் கண்மணி..
பெண்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ..
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ..
விடை இல்லா ஒரு கேள்வி..
ஆண்: உயிர் காதல் ஒரு வேள்வி..
