UN PAARVAI MELE PATTAL
உன் பார்வை மேலே பட்டால்
Movie: Chennai 600028
Singers: Vijay yesudas
Music director: Yuvan shankar raja,
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்..
ஒரு வார்த்தை பேச கேட்டால் நான் கவிதை என்கின்றேன்..
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்..
எனை சேர நீ எதை கேட்கிறாய் சொல்..
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்..
ஒரு வார்த்தை பேச கேட்டால் நான் கவிதை என்கின்றேன்..
இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்தை..
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்தை..
உனை எண்ணி தினம் புல்லரிக்கும் மனதினை செல்லரிக்க விடுபவள் நீதானே..
உயிர் நாளும் கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி நல்லிரவு ஒவ்வோன்றையும் முள்ளிரவு என்று செய்தாயே..
நுரையீரல் தேடும் சுவாசமே..
விழியோரம் ஆடும் சொப்னமே..
மடியில் வந்தால் சௌக்யமே..ஏ... அன்பே..
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்..
ஒரு வார்த்தை பேச கேட்டால் நான் கவிதை என்கின்றேன்..
சில காதல் இங்கே கல்லறைக்குள் அடக்கம்..
சில காதல் இங்கே சில்லறைக்குள் தொடக்கம்..
அது போல அல்ல கல்லறையை கடந்திடும் சில்லறையை ஜெயித்திடும் என் காதல்..
உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்
அது போல காதல் சிக்காகோவில் கண்டதில்லை சென்சீனாவும் கண்டதில்லை சோவியத்தும் கண்டதில்லை என்பேனே..
மழைநாளில் நீதான் வெப்பமே..
வெயில் நாளில் தண்ணீர் தெப்பமே..
உளி ஏதும் தீண்டா சிற்பமே..ஏ.. அன்பே..