JUNE JULY MAADHAM
ஜூன் ஜூலை மாதம்
Movie: Kalloori
Singers: Krish, Rita thyagarajan
Music director: Joshua sridhar
ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ அதன் பேர் நட்பு..
நெடுஞ்சாலை ஓரம் பூக்கும் பூ அட அதுதான் நம் நட்பு..
நெஞ்சோடு பூக்கும் ஞாபக பூ அதன் பேர் நட்பு..
பூமியில் உள்ள பூவெல்லாம் ஒரு நாளிலே மண்ணில் உதிரும் பூ..

வாழ்க்கையில் நம் வாழ்க்கையில் என்றும் பூக்குமே அது தான் நட்பு..
ஆண்: ஊர் கூடி வந்தாலும் எதிர்க்குமே..
உன் விழி துடிக்கையில் துடிக்குமே..
பெண்: உன் சோகம் இறக்கி வைக்க இறைவன் அனுப்பி வைத்த தோள்கள் தோழமையில் இருக்குமே..
ஆண்: கல்லூரி என்ன கொடுத்தது..
கண் மூடி நினைத்தால் புரியுது..
பெண்: வெறும் கல்வி மட்டும் இல்லை..
கனவு மட்டும் இல்லை..
கண்கள் கலங்க வைக்கும் உறவுகள்..
ஆண்: எத்தனையோ குறும்புகள் செய்தோம்..
எத்தனையோ கனவுகள் நெய்தோம்..
எத்தனையோ காயங்கள் கண்டோம் தோழனே..
எத்தனையோ சண்டைகள் பார்த்தோம்..
எத்தனையோ வம்புகள் செய்தோம்..
எத்தனையோ பாடங்கள் கற்றோம்..
அத்தனையும் நாங்கள் தான் நெஞ்சுக்குள் என்றும் இருக்கும்..
ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ அதன் பேர் நட்பு..
நெடுஞ்சாலை ஓரம் பூக்கும் பூ அட அதுதான் நம் நட்பு..
நெஞ்சோடு பூக்கும் ஞாபக பூ அதன் பேர் நட்பு..
பூமியில் உள்ள பூவெல்லாம் ஒரு நாளிலே மண்ணில் உதிரும் பூ..
வாழ்க்கையில் நம் வாழ்க்கையில் என்றும் பூக்குமே அது தான் நட்பு..
பெண்: விதைக்குள் உறங்கும் மரங்களை காற்றும் மழையும் எழுப்புமே..
உனக்குள் ஒளிந்திருக்கும் உனது திறமைகளை நட்பு இனம் கண்டு உயர்த்துமே..
ஆண்: நாளைக்கு நம்முடைய பெயர்களை..
மரமும் செடியும் உரைக்குமே..
ஆ&பெ: இந்த வகுப்பின் மேஜையிலும் நடந்த பாதையிலும் நமது சிரிப்பொலிகள் இருக்குமே..
ஆண்: விடுமுறைகள் வந்திடும் போதும்..
வீட்டுக்குள் இன்பங்கள் ஏது..
மறுபடியும் இங்கே வர தோன்றுமே..
தனிமையிலே சில நொடிகள் போக..
வெறுமையிலே சில நொடிகள் போக..
எல்லாரும் ஒன்றாக சேர
மனசுக்குள் ஆசைகள் மோத கல்லூரி நம்மை அழைக்கும்..
ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ அதன் பேர் நட்பு..
நெடுஞ்சாலை ஓரம் பூக்கும் பூ அட அதுதான் நம் நட்பு..
நெஞ்சோடு பூக்கும் ஞாபக பூ அதன் பேர் நட்பு..
பூமியில் உள்ள பூவெல்லாம் ஒரு நாளிலே மண்ணில் உதிரும் பூ..
வாழ்க்கையில் நம் வாழ்க்கையில் என்றும் பூக்குமே அது தான் நட்பு..
.........................
Songs lyrics from Kalloori movie: