ADI PENNE ORUMURAI NEE SIRITHAL

 அடி பெண்ணே


Movie: Naam

Singers: Stephen zechariah, Srinisha jayaseelan

Music director: Stephen zechariah


ஆண்: அடி பெண்ணே ஒருமுறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழையடிக்கும்..
அடி பெண்ணே ஒருமுறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழையடிக்கும்..

பெண்: ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில் கவிதை ஒன்றை எழுதினாய்..
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே பார்வையாலே சொல்கிறாய்..

ஆண்: உன்னோடு நானும்  வாழ..
உன்னோடு நானும் சாக..
உன் மடி சாயவா உன் மடி சாயவா..

பெண்: உன் பார்வை என்னை கொல்ல..
சாய்ந்தேனே நானும் மெல்ல..
நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா..

ஆண்: ஓ உனது சிரிப்பினில் சிதறும் அழகினை பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ..

பெண்: வேர்வை துளிகளும் தீர்த்தம் போல என் மேலே படுகையில் பாவம் அழியுதோ..

ஆண்: இருவர் வாழும் உலகிலே உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே..

பெண்:  இரவில் தேயும் நிலவிலே நாம் சேர்ந்து  வாழ்வோம் அருகிலே..

ஆண்: அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன்..

பெண்: நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்..

உன் பார்வை என்னை கொல்ல..
சாய்ந்தேனே நானும் மெல்ல..
நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா..

ஆண்: உன்னோடு நானும்  வாழ..
உன்னோடு நானும் சாக..
உன் மடி சாயவா உன் மடி சாயவா..

பெண்: என் அன்பே ஒருமுறை நீ ரசித்தால் என் உள்ளே ஏதோ புது மயக்கம்..
என் அன்பே ஒருமுறை நீ ரசித்தால் என் உள்ளே ஏதோ புது மயக்கம்..

ஆண்: எனது பிறவியின் அர்த்தம் உணரவே உன்னை எனது வாழ்வில் தந்ததோ..

பெண்:  தேகம் தீண்டும் தூரம் இருந்துமே உனது விழியிலே ஜீவன் தொலையுதோ..
மழையில் காதல் உன் மடியிலே..
நித்தம் அணைத்து கொள் இரு உயிரிலே..

ஆண்: விழிகள் பேசும் மொழியிலே இனி மௌனம் கூட பிழையில்லை..

பெண்:  அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன்..

ஆண்: நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்..

அடி பெண்ணே ஒருமுறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழையடிக்கும்..

பெண்: என் அன்பே ஒருமுறை நீ ரசித்தால் என் உள்ளே ஏதோ புது மயக்கம்..

ஆண்: நீ இரவல் உயிரா இரவின் வெயிலா..
மழையின் வாசம் நீயடி..
நீ கவிதை மொழியா கவிஞன் வழியா..
உயிரின் சுவாசம் நீயடி..

ஆண்: உன்னோடு நானும்  வாழ..
உன்னோடு நானும் சாக..
உன் மடி சாயவா உன் மடி சாயவா..

பெண்: உன் பார்வை என்னை கொல்ல..
சாய்ந்தேனே நானும் மெல்ல..
நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா..