VA VA NILAVA PUDICHI THARAVA

வா வா நிலவ புடிச்சி தரவா



Movie: Naan mahan alla

Singers:  Haricharan 

Music director: Yuvan Shankar raja 


வா வா நிலவ புடிச்சி தரவா..
வெள்ளி பொம்மையாக்கி தரவா..
ஒஹோ விடியும்போதுதான் மறைஞ்சு போகுமே கட்டி போடு மெதுவா..
வா வா நிலவ புடிச்சி தரவா..
வெள்ளி பொம்மையாக்கி தரவா..
ஒஹோ விடியும்போதுதான் மறைஞ்சு போகுமே கட்டி போடு மெதுவா..
வானத்தில் ஏறி ஏணி கட்டு..
மேகத்தை அள்ளி மாலை கட்டு..
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு..
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு..
ஓஓ..ஓஓஓ..ஓஓ..ஓஓஓ

வா வா நிலவ புடிச்சி தரவா..
வெள்ளி பொம்மையாக்கி தரவா..
ஒஹோ விடியும்போதுதான் மறைஞ்சு போகுமே கட்டி போடு மெதுவா..

கவலை நம்மை சிலநேரம் கூறுபோட்டு துண்டாக்கும்..
தீயினை தீண்டி வாழும்போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்..
கடலைச் சேரும் நதியாவும் தன்னை தொலைத்து உப்பாகும்..
ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்..
ஒரு வட்டம் போலே வாழ்வாகும்..
வாசல்கள் இல்லா கனவாகும்..
அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை புரிந்தால் துயரம் இல்லை..
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு..
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு..
ஓஓ..ஓஓஓ..ஓஓ..ஓஓஓஓ..

வா வா நிலவ புடிச்சி தரவா..
வெள்ளி பொம்மையாக்கி தரவா..
ஒஹோ விடியும்போதுதான் மறைஞ்சு போகுமே கட்டி போடு மெதுவா..

ஆஆ..இரவை பார்த்து மிரளாதே..
இதயம் வேர்த்து துவளாதே..
இரவுகள் மட்டும் இல்லை என்றால் நிலவின் அழகு தெரியாதே..
கனவில் நீயும் வாழாதே..
கலையும் போது வருந்தாதே..
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே..
அந்த வானம் போலே உறவாகும்..
மேகங்கள் தினமும் வரும் போகும்..
அட வந்தது போனால் மறுபடி ஒன்று புதியாய் உருவாகும்..
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு..
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு..
ஓஓ..ஓஓஓ..ஓஓ..ஓஓஓஓ..