ORUMURAI PIRANDHEN
ஒருமுறை பிறந்தேன்
Movie: Nenjirukum varai
Singers: Hariharan, sadhana sargham
Music director: Srikanth Deva
ஆண்: ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்..
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்..
மனதினில் உன்னை சுமப்பதினாலே..
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்..
என் கண்ணில் உனை வைத்தே காட்சிகளை பார்ப்பேன் ..
ஒரு நிமிடம் உனை மறக்க முயன்றதிலே தோற்றேன்..
நீயே என் இதயமடி..
நீயே என் ஜீவனடி..
ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்..
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்..
மனதினில் உன்னை சுமப்பதினாலே..
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்..
என் கண்ணில் உனை வைத்தே காட்சிகளை பார்ப்பேன் ..
ஒரு நிமிடம் உனை மறக்க முயன்றதிலே தோற்றேன்..
நீயே என் இதயமடி..
நீயே என் ஜீவனடி..
ஆண்: ஓ உந்தன் நெற்றி மீதிலே துளி வேர்வை வரலாகுமா..
சின்னதாக நீயும் தான் முகம் சுளித்தால் மனம் தாங்குமா..
உன் கண்ணிலே துளி நீரையும் நீ சிந்தவும் விடமாட்டேன்..
உன் நிழலையும் தரை மீதிலே நடமாடவும் விட மாட்டேன்..
பெண்: ஒரே உடல்.. ஒரே உயிர்.. ஒரே மனம்..
நினைக்கையில் இனிக்கிறதே..
ஆண்: நீயே என் இதயமடி..
நீயே என் ஜீவனடி..
பெண்: காற்று வீசும் மாலையில் கடற்கரையில் நடை போடணும்..
உன் மடி தான் பாய்மரம் படகேறி திசை மாறணும்..
ஒளி வீசிடும் இரு கண்கள் தான் வழி காட்டிடும் கலங்கரையா..
கரை சேரவே மனம் இல்லையே என தோன்றுதல் அது பிழையா..
ஆண்: நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து பூட்டி விட்டு சாவியை தொலைத்து விட்டேன்..
பெண்: நீயே என் இதயமடா..
நீயே என் ஜீவனடா..
ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்..
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்..
மனதினில் உன்னை சுமப்பதினாலே..
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்..
என் கண்ணில் உனை வைத்தே காட்சிகளை பார்ப்பேன் ..
ஒரு நிமிடம் உனை மறக்க முயன்றதிலே தோற்றேன்..
நீயே என் இதயமடா..
நீயே என் ஜீவனடா..
