EN MANATHIL

 என் மனதில்

Movie: Samurai

Singers:  vasundara das 

Music director:Harris jayaraj 

டிங் டாங் டி டிங் டாங் 
என் மனதில் மணி ஒலியா..
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் என் நெஞ்சில் பனி மழையா..
டிங் டாங் டி டிங் டாங்..
என் மனதில் மணி ஒலியா..
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் என் நெஞ்சில் பனி மழையா..
ஒரு மெல்லிய பூவின் மேலே மின்சாரம் பாய்கிறது..
அட வெட்கம் என்னும் கத்தி என்னை வெட்டி தின்கிறதே..
இது போல சுகமான வலி இல்லை.. என்றாலும் வலி சொல்ல மொழி இல்லை..

மேகமாய் மேகமாய் பொறுப்புகள் என்னை விட்டு பறந்தன ஏன் பறந்தன..
நெஞ்சிலே நெஞ்சிலே நினைவுகள் எனை விட்டு தொலைந்தன..ஏன் தொலைந்தன..
பூப்பறிக்க இது நேரமா..
இல்லை எனக்கு தான் நேரமா..
சூரியன் நனைக்குமா..
சந்திரன் எரிக்குமா..
கனவுக்கும் நிஜத்துக்கும் இடைவெளி குறையுமா..
 
டிங் டாங் டி டிங் டாங் 
என் மனதில் மணி ஒலியா..
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் என் நெஞ்சில் பனி மழையா..
டிங் டாங் டி டிங் டாங்..
என் மனதில் மணி ஒலியா..
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் என் நெஞ்சில் பனி மழையா..
ஒரு மெல்லிய பூவின் மேலே மின்சாரம் பாய்கிறது..
அட வெட்கம் என்னும் கத்தி என்னை வெட்டி தின்கிறதே..
இது போல சுகமான வலி இல்லை.. என்றாலும் வலி சொல்ல மொழி இல்லை..

மனசுக்குள் மனசுக்குள் சாக்ஸோஃபோன் வாசிக்கும் ஆள் இவன் அந்த ஆள் இவன்..
உண்மையில் பெண்களை முதல் முதல் திறந்தவன் யார் அவன் அட யார் அவன்..
இதயத்தை கிள்ளும் இளைஞனோ..
என் இமைகளை கொல்லும் திருடனோ..
கனவுக்கு வர்ணங்கள் சேர்த்திடும் கலைஞனோ..
நெற்றி சுற்றி எட்டி வெக்கும் வட்டங்களும் அழிந்ததே..
என்னை பற்றி எண்ணி வந்த பிம்பங்களும் உடையுதே..