MAZHAI VARUM ARIKURI

 மழை வரும் அறிகுறி

Movie : Veppam

Singers: Suzanne D'mello

Music director: Joshua sridhar 

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே..
மனம் இன்று நனையுதே..
இது என்ன காதலா சாதலா..
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே..
பாதைகள் நழுவுதே..
இது ஏனோ ஏனோ..
உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது..
உன்னோடு போகும்போது பூப்பூக்கும் சாலை யாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே..

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே..
மனம் இன்று நனையுதே..
இது என்ன காதலா சாதலா..
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே..
பாதைகள் நழுவுதே..
இது ஏனோ ஏனோ..

அறியாதொரு வயதில் விதைத்தது..ஓஓ...
அதுவாகவே தானாய் வளர்ந்தது ஓ..
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில்..ஓஓ..
அட யாரதை யாரதை பறித்தது ஓ..
உன் கால்தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே 
அது பாதியில் தொலைந்ததடா..

நான் கேட்டது அழகிய நேரங்கள்..ஓஓ..
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஓ..
நான் கேட்டது வானவில் மாயங்கள் ஓஓ..
யார் தந்தது வழிகளில் காயங்கள் ஓ..
இந்த காதலும் ஒருவகை சித்திரவதை தானே 
அது உயிருடன் எரிக்குதடா..