CHITTU CHITTU KURUVIKU
சிட்டு சிட்டு குருவிக்கு
Movie: Ullathai allitha
Singers: Mano, Sujatha
Music director: Sirpy
பெண்: சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு..
அது தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானம் இருக்கு..
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா..
சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சில் மோதுதம்மா..
சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு..
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா..
சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சில் மோதுதம்மா..
ஆண்: மூஞ்ச பார்த்தே கண்டுபிடிச்சேன்
நீங்க மொச புடிக்கும் நாய்தான் மாப்பிள்ள
நன்றி எல்லாம் நாய போலத்தான்
ஆனா வாலு மட்டும் இல்ல மாமோய்
பெண்: தொட்டவுடன் சிணுங்கிடும் செடி ஒன்னு இருக்கு..
தொட்டவுடன் மொட்டு விடும் கொடி என்ன சொல்லவா..
கொடி என்ன சொல்லவா..
ஆண்: மின்னலுக்கும் வெட்கம் வர மண்ணில் வந்து நடக்கும்
கன்னிமகள் சின்ன இடை கொடி என்று சொல்லவா
கொடி என்று சொல்லவா
பெண்: சிக்கிமுக்கி கல்ல போல பத்திக்கிச்சி நெருப்பு
நெஞ்சுக்குள்ள ரெண்டு பங்கு துடிப்பு
நான் பச்சை வாழையா முத்தம் சிந்தி என்னை அணைக்கும் நீ சாரல் மழையா..
பெண்: சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு..
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சில் மோதுதம்மா..
ஆண்: தங்கமான குணத்த கண்டு ஒரு தங்கம் ஒன்னு போட்டு புடிச்சேன் மாப்ளேய்
தண்ணிக்குள்ள நெய் எடுப்பேன் நான்
அந்த தந்திரத்த சொல்ல மாட்டேன் மாமோய்..
ஆண்: வண்ணமதி வட்டமதி வானத்திலே இருக்கும்
பூமி எல்லாம் தேடும் மதி என்னவென்று சொல்லவா
என்னவென்று சொல்லவா
பெண்: நீ எனக்கு தந்த மதி உன் மடியில் கிடைக்கும் நிம்மதி தான் என்று உந்தன் காதில் வந்து சொல்லவா
காதில் வந்து சொல்லவா..
ஆண்: உள்ளம் எங்கும் உன் பெயரை சொல்லி சொல்லி துடிக்கும்
உள்ளுக்குள்ளே ஊமை வெயில் அடிக்கும்
பனி சிந்தும் பூவனம் போர்வை போல என்னை மூடும் ஒரு சேலை மேகம்..
பெண்: சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு..
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சில் மோதுதம்மா..
சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு..
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானம் இருக்கு..
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சில் மோதுதம்மா..