YAARO IVAN

யாரோ இவன்




Movie: Udhayam NH4

Singers: G.V.Prakash kumar,  Saindhavi 

Music director: G.V.Prakash kumar 


பெண்: யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்..
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்..

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்..
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்..

ஆண்: உன் காதலில் கரைகின்றவன்..
உன் பார்வையில் உறைகின்றவன்..
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்..

பெண்: என் கோடையில் மழையானவன்..
என் வாடையில் வெயிலானவன்..
கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்..

ஆண்: எங்கே உனை கூட்டி செல்ல..
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல..

பெண்: என் பெண்மையும் இளைப்பாறவே..
உன் மார்பிலே இடம் போதுமே..

ஆண்: ஏன் இன்று இடைவெளி குறைகிறதே..

பெண்: மெதுவாக இதயங்கள் இணைகிறதே..

ஆண்:  உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே..

பெண்: யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்..
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்..

பெண்: உன் சுவாசங்கள் எனை தீண்டினால்..
என் நாணங்கள் ஏன் தோற்குதோ..

ஆண்: உன் வாசனை வரும் வேளையில்..
என் யோசனை ஏன் மாறுதோ..

பெண்: நதியினில் ஒரு இலை விழுகிறதே..

ஆண்: அலைகளில் மிதந்து அது தவழ்கிறதே..

பெண்: கரை சேருமா உன் கை சேருமா எதிர்காலமே..

எனக்காகவே பிறந்தான் இவன்..
எனை காக்கவே வருவான் இவன்..
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்..
என் கோடையில் மழையானவன்..
என் வாடையில் வெயிலானவன்..
கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்..