ICHANKAATULE MUYAL ONNU

 ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு




Movie: V.I.P 

Singers: KK,  anupama 

Music director: Ranjith barot 


ஆண்: ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு..
கூச்சங்காட்டுது புதுசுன்னு..

பெண்: சவுக்கு தோப்புல குயிலொன்னு..
கவுக்க பாக்குது சிறுசுன்னு..

ஆண்: மனச தாக்குற புயல் ஒன்னு..
உசிர கேட்குது பசிக்குதுன்னு..

பெண்: தீப்பிடிக்கும் ஏ தீண்டாதே..

ஆண்: தீண்டாமலே விருந்தில்லையே..

பெண்: மலையோரம் மேயுதே கண்ணல்லவா..
குறும்போடு பார்க்குதே வம்பல்லவா..

ஆண்: கௌதாரியே துணை தேடியே
புதரோரம் விளையாடுதே..

பெண்: எறும்பேறும் நேரமே கரும்பாறை கூசுமே..

ஆண்: மழை தூறும் நேரமே கொடையாகும் தேகமே..

பெண்: ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு..

ஆண்: கூச்சங்காட்டுது புதுசுன்னு..

ஆண்: பதநீர் பானையில் வண்டல்லவா.. 
பசி ஆறி போகுதே இன்றல்லவா..

பெண்: நிறமானதே சிவப்பானதே மருதாணி பூசாமலே..

ஆண்: கடலான தாகமே நதி தேடி போகுதே..

பெண்: இனிப்பான தீயிலே இளம் நெஞ்சம் வேகுதே..

ஆண்: ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு..
கூச்சங்காட்டுது புதுசுன்னு..

பெண்: தீப்பிடிக்கும் ஏ தீண்டாதே..

ஆண்: மனச தாக்குற புயல் ஒன்னு..
உசிர கேட்குது பசிக்குதுன்னு..

பெண்: தீப்பிடிக்கும் ஏ தீண்டாதே..

ஆண்: ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு..
கூச்சங்காட்டுது புதுசுன்னு..