YAANJI YAANJI
யாஞ்சி யாஞ்சி...
Movie: Vikram vedha
Singers: Anirudh, Shakthisri gopalan
Music director: Sam CS
ஆண்: யாஞ்சி...யாஞ்சி... என் நெஞ்சில் வந்து நிக்குற..ஏன் ஏன் ஏன்..
என்ன சாஞ்சி.. சாஞ்சி.. நீ பாத்து உன்ன சிக்க வைக்குற..ஏன் ஏன் ஏன்..
பெண்: கனாவென முளைக்கிறாய்..
இமை அணைக்கையில்..
நான் வினாவென வளைகிறேன்.. உனை நினைக்கையில்..
ஆண்: ஓ..நெஞ்சாத்தியே.. நெஞ்சாத்தியே..நீதானடி என் வாழ்க்கையே..
ஓ ஓ ஓ..நீ என்பதே நான் என்கிற நீயே..
ஓ..நெஞ்சாத்தியே.. நெஞ்சாத்தியே.. நீதானடி என் வாழ்க்கையே..
ஓ ஓ ஓ..நீ என்பதே நான் என்கிற நீயே..
யாஞ்சி...யாஞ்சி...
பெண்: மென்மையாய் மெல்ல நகரும் எந்தன் நாட்குறிப்பில்..
வன்மையாய் நீ வந்து சேரும் மாயம் என்ன..
என்னவோ செய்கிறாய்..
நீ என் ஆயுள் எல்லைகள் போலாகிறாய்..
ஆண்: ஓ ஓ ஓ..காந்தமாய் என்னை என்னை ஈர்க்கும் உந்தன் அன்பு இன்று..
சாந்தமாய் என்னை கட்டிபோடும் ஜாலம் என்ன..
கேட்கிறேன் கூறடி பெண்மையே..
பெண்: வாழ்க்க போகும் தூரம் நீயும் நானும் போக வேணும்
எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுது..
ஆண்: நீ எந்தன் பாதி என்றும்
நானும் உந்தன் மீதி என்றும்..
காதல் காதுக்குள்ளே வந்து ஓதுது
ஓ..ஓ..யாஞ்சி..
பெண்: உன் விரல் என்னை செல்லமாக தீண்டும் நேரம்..
என் நிழல் உன்னை ஒட்டி கொள்ளும் ரொம்ப நேரம்..
போர்வையில் நூலென சேர்ந்து கொண்டோமே எப்போதும் கண்மூடியே..
ஆண்: பிரம்மனால் ஆன பொம்மலாட்டம் பூமி மீது..
நூலினால் ஆடும் பொம்மையாக நீயும் நானும் ..
ஆடுவோம்..சாடுவோம்..மீளுவோம்..
பெண்: ஏதோ ராகம் நெஞ்சுக்குள்ளே வந்து வந்து உன் பேரை சொல்லி சொல்லி பாடுது..
ஆண்: என் இரத்த செல்கள் உன்ன கண்ட பின்பு கொடிகள் ஏந்தி உன்ன முத்தம் செய்ய சொல்லி கூவுது..
ஓ..ஓ..ஓ...
ஓ..நெஞ்சாத்தியே.. நெஞ்சாத்தியே..நீதானடி என் வாழ்க்கையே..
ஓ ஓ ஓ..நீ என்பதே நான் என்கிற நீயே..
ஓ..நெஞ்சாத்தியே.. நெஞ்சாத்தியே..நீதானடி என் வாழ்க்கையே..
ஓ ஓ ஓ..நீ என்பதே நான் என்கிற நீயே..
ஓ..நெஞ்சாத்தியே.. நெஞ்சாத்தியே..நீதானடி என் வாழ்க்கையே..
ஓ ஓ ஓ..நீ என்பதே நான் என்கிற நீயே..
ஓ..நெஞ்சாத்தியே.. நெஞ்சாத்தியே..நீதானடி என் வாழ்க்கையே..
ஓ ஓ ஓ..நீ என்பதே நான் என்கிற நீயே..
யாஞ்சி....ஏன்...
..........
