POOJA VAA
பூஜா வா
Movie: Priyamudan
Singers:S.P.Balasubramaniam, Chithra
Music director: Deva
ஆண்: பூஜா வா..பூஜா வா..
பூஜைக்கு வந்த நிலவே வா..
பூஜா வா..பூஜா வா..
பூஜைக்கு வந்த நிலவே வா..
இந்திர மண்டலம் தேடும் அழகே வா..
ரோஜா வா..ரோஜா வா..
ஏதேன் தோட்டத்து ரோஜா வா..
உறங்கும் போதும் வாழும் நினைவே வா..
தோளில் நீ தூங்கு..உன் தூக்கம் நானாவேன்..
உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்..
உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே..
.......
ஆண்: பூவை பறிக்கும் போது அதில் ஈரம் உன் காதல்..
வாளை எடுக்கும்போது அதில் வீரம் உன் காதல்..
பெண்: ஜன்னல் திறக்கும்போது வரும் காற்றில் உன் காதல்..
கண்கள் உறங்கும்போது வரும் கனவில் உன் காதல்..
ஆண்: உன் பேரை சொன்னாலே முத்தத்தின் சத்தங்கள்..
பெண்: நீ என்னை கண்டாலே தித்திக்கும் ரத்தங்கள்..
ஆண்: நீ போடும் ஒரு கோலத்திலே..
புள்ளியை போல் நான் இருந்தேனே..
பெண்: நீ தீண்டும் அந்த நேரத்திலே..
பறவையை போல் நான் பறந்தேனே..
ஆண்: நீ போகும் வழியெங்கும் நான்தானே ஆகாயமே..
பூஜா வா..பூஜா வா..பூஜைக்கு வந்த நிலவே வா..
........
ஆண்: விளக்கை மூடும் சிமிழாய் நான் உன்னை மூடுகிறேன்..
உன் மேல் விழுந்த வெயிலால் நான் சருகாய் மாறுகிறேன்..
பெண்:உந்தன் நினைப்பில் தானே நான் இன்னும் வாழுகிறேன்..
உந்தன் சிரிப்பில் தானே என் உதயம் காணுகிறேன்..
ஆண்: மீன் உன்னை கடித்தாலே ஆற்றுக்கு தீ வைப்பேன்..
பெண்: மோகத்தீ மூட்டாதே ஆற்றுக்குள் நான் நிற்பேன்..
ஆண்: உன் மனதில் எனை நிரப்பிவிடு..
உன் உலகில் என்னை பரப்பிவிடு..
பெண்: கடமைகளை நீ மறந்துவிடு..
கண்களிலே நீ இருந்துவிடு..
ஆண்: அன்பே உன் நிழல் கூட என் மீது விழ வேண்டுமே..
..........
பூஜா.....பூஜா வா..பூஜா வா..
பூஜைக்கு வந்த நிலவே வா..
ரோஜா வா..ரோஜா வா..
ஏதேன் தோட்டத்து ரோஜா வா..
உறங்கும் போதும் வாழும் நினைவே வா..
பெண்:தோளில் நீ தூங்கு..உன் தூக்கம் நானாவேன்..
ஆண்: உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்..
பெண்: உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே..
Songs lyrics from Priyamudan movie:-
