NARUMUGAYE

 நறுமுகையே..


Movie: Iruvar

Singers:Unni krishnan, Bombay Jayashree

Music director: A.R.Rahman


ஆண்: நறுமுகையே..நறுமுகையே.. 
நீ ஒரு நாழிகை நில்லாய்..
செங்கனி ஊறிய வாய் திறந்து..
நீ ஒரு திருமொழி சொல்லாய்..
அற்றை திங்கள் அந்நிலவில்..
நெற்றிதிரள நீர் வடிய..
கொற்ற பொய்கை ஆடியவள் நீயா..
அற்றை திங்கள் அந்நிலவில்..
நெற்றிதிரள நீர் வடிய..
கொற்ற பொய்கை ஆடியவள் நீயா..

பெண்:  திருமகனே..திருமகனே..
நீ ஒரு நாழிகை பாராய்..
வெண்ணிற புரவியில் வந்தவனே..
வேல்விழி மொழிகள் கேளாய்..
அற்றை திங்கள் அந்நிலவில்..
கொற்ற பொய்கை ஆடுகையில்..
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..
அற்றை திங்கள் அந்நிலவில்..
கொற்ற பொய்கை ஆடுகையில்..
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..



ஆண்:  மங்கை மான்விழி அம்புகள்
என் மார் துளைத்ததென்ன..
மங்கை மான்விழி அம்புகள்
என் மார் துளைத்ததென்ன..

பெண்:  பாண்டி நாடனை கண்டு என்னுடல் பசலை கொண்டதென்ன..

ஆண்:  நிலாவிலே பார்த்த வண்ணம்..
கனாவிலே தோன்றும் இன்னும்..
நிலாவிலே பார்த்த வண்ணம்..
கனாவிலே தோன்றும் இன்னும்..

பெண்:  இளைத்தேன்..துடித்தேன்..
பொறுக்கவில்லை..
இடையினில் மேகலை இருக்கவில்லை..



ஆண்:  நறுமுகையே.. நறுமுகையே.. 
நீ ஒரு நாழிகை நில்லாய்..
செங்கனி ஊறிய வாய் திறந்து..
நீ ஒரு திருமொழி சொல்லாய்..

பெண்:  அற்றை திங்கள் அந்நிலவில்..
கொற்ற பொய்கை ஆடுகையில்..
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..

ஆண்: அற்றை திங்கள் அந்நிலவில்..
நெற்றிதிரள நீர் வடிய..
கொற்ற பொய்கை ஆடியவள் நீயா..



பெண்: யாயும் யாயும் யாராகியரோ.. நெஞ்சில் நேர்ந்ததென்ன..
யாயும் யாயும் யாராகியரோ.. நெஞ்சில் நேர்ந்ததென்ன..

ஆண்: யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன..

பெண்: ஒரே ஒரு தீண்டல் செய்தாய்.. 
உயிர் கொடி பூத்ததென்ன..
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்.. 
உயிர் கொடி பூத்ததென்ன..

ஆண்:  செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்..
அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன..

பெண்:  திருமகனே..திருமகனே..
நீ ஒரு நாழிகை பாராய்..
வெண்ணிற புரவியில் வந்தவனே..
வேல்விழி மொழிகள் கேளாய்..
அற்றை திங்கள் அந்நிலவில்..
கொற்ற பொய்கை ஆடுகையில்..
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..

ஆண்: அற்றை திங்கள் அந்நிலவில்..
நெற்றிதிரள நீர் வடிய..
கொற்றை பொய்கை ஆடியவள் நீயா..

பெண்: ஆ...

ஆண்:  நீயா..

பெண்: ஆ...

ஆண்:  நீயா..

..........