MAZHAIYIN SAARALIL

 மழையின் சாரலில்


Movie:  Aaha kalyanam

Singers: Naresh iyer, Swetha mohan

Music director: Dharan kumar


பெண்: மழையின் சாரலில்..மழையின் சாரலில்
நனைய தோன்றுது..நடுங்க தோன்றுது..
பிழைகள் என்றே தெரிந்தும் கூட..
பிடித்து போனது..புதையல் ஆனது..
விருப்பம் பாதி..தயக்கம் பாதி..
கடலில் ஒரு கால்..கரையில் ஒரு கால்..
அலைகள் அடித்தே கடலில் விழவா..
துரும்பை பிடித்தே கரையில் எழவா..
இதுவரை...இதுபோலே...
இருமனம் கொண்டு தவித்ததில்லை..
அதிலுமே....எனக்காக...
திருமணம் வரை நினைத்ததில்லை..
ஓ....ஓ...ம்..ம்..ஓஓ...

ஆ..ஆ..மழையின் சாரலில்..மழையின் சாரலில்..
நனைய தோன்றுது..நடுங்க தோன்றுது..
பிழைகள் என்றே தெரிந்தும் கூட..
பிடித்து போனது..புதையல் ஆனது..

ஆண்: Sometimes I need your love
Sometimes I need your hug
What would I do now
What would I do now
Sometimes I need you
Sometimes I feel you 
What would I do now 
What would I do now 

பெண்: மழையின் சாரலில்..மழையின் சாரலில்..
நனைய தோன்றுது..நடுங்க தோன்றுது..

யார் யாரோ பூச்சூட..பூமாலை நான் வாங்க..
நான் சூடும் பூமாலை..நாள் பார்த்து யார் வாங்க..

ஆண்:கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் ஏங்க..
மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண..

பெண்: வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும் 
ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா..
நடந்து பழகும் விழுந்து அழுகும்
குழந்தை வயதின் சறுக்கல் இதுவா..
ஆமாம்..ஆமாம்..

ஆண்:இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்..
தெரிந்து கொண்டே தொலைந்து போனோம்..ஆ..ஆ...ஆ..

விருப்பம் பாதி.. தயக்கம் பாதி..
கடலில் ஒரு கால்..கரையில் ஒரு கால்..
அலைகள் அடித்தே கடலில் விழவா..
துரும்பை பிடித்தே கரையில் எழவா..

பெண்:  இதுவரை இதுபோலே இருமனம் கொண்டு தவித்ததில்லை..
அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை..

மழையின் சாரலில்..மழையின் சாரலில்..
நனைய தோன்றுது..நடுங்க தோன்றுது..
பிழைகள் என்றே தெரிந்தும் கூட..
பிடித்து போனது..புதையல் ஆனது

மழையின் சாரலில்..மழையின் சாரலில்..
நனைய தோன்றுது..நடுங்க தோன்றுது..
பிழைகள் என்றே தெரிந்தும் கூட..
பிடித்து போனது..புதையல் ஆனது