ADIYE AZHAGE
அடியே அழகே
Movie: Oru naal koothu
Singers: Padmalatha, Sean roldan
Music director: Justin prabhakaran
ஆண்: அடியே அழகே..என் அழகே அடியே..
பேசாம நூறு நூறா கூறு போடாத..
வலியே வலியே..என் ஒளியே ஒளியே..
நான் ஒண்ணும் பூதமில்ல.. தூரம் ஓடாத..
காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே..
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே..
வாயாடி பேயா என் தூக்கம் தூக்கி போற..
அடியே அழகே..என் அழகே அடியே..
பேசாம நூறு நூறா கூறு போடாத..
வலியே வலியே..என் ஒளியே ஒளியே..
நான் ஒண்ணும் பூதமில்ல.. தூரம் ஓடாத..
.........
போனா போறா..தானா வருவா.. மெதப்புல திரிஞ்சேன்..
வீராப்பெல்லாம் வீணா போச்சு.. பொசுக்குனு ஒடஞ்சேன்..
உன் சொகபார்வ உரசுது மேல..
சிரிக்கிற ஓச சரிக்கிது ஆள..
தீத்தூவி...
ஏ..தீத்தூவி போனா அவ வேணும் நானும் வாழ..
.............
பெண்: ஏனோ உன்ன..பாத்தா உள்ள.. சுருக்குனு வருது..
ஆனா கிட்ட.. நீயா வந்தா.. மனசங்க விழுது..
ஆண்: எதுக்கிந்த கோபம்... நடிச்சது போதும்..
மறச்சு நீ பாத்தும் வெளுக்குது சாயம்..
பெண்: ஏ..நேத்தே நான் தோத்தேன்..
அட இதுதானா உன் வேகம்..
.......
ஆண்: அடியே..அழகே..
பெண்: அழகே..
ஆண்: அழகே..அடியே..
பெண்: அடியே..
ஆண்: பேசாம நூறு நூறா கூறு போடாத..
வலியே..வலியே..
பெண்: வலியே..
ஆண்: ஒளியே..ஒளியே..
பெண்: ஒளியே..
ஆண்: நான் ஒண்ணும் பூதமில்ல.. தூரம் ஓடாத..
காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே..
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே..
வாயாடி பேயா என் தூக்கம் தூக்கி போற..
..........
