AATHANGARA MARAME

 ஆத்தங்கர மரமே..


Movie: Kizhakku seemaiyile

Singers: Mano, Sujatha mohan

Music director: A.R.Rahman 


ஆண்: அத்தைக்கு பிறந்தவளே..
ஆளாகி நின்றவளே..
பருவம் சுமந்து வரும்.. 
பாவாடை தாமரையே..
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ..
மூன்றாம் பிறையே நீ முழு நிலவானதெப்போ..
மௌனத்தில் நீ இருந்தா யாரைத்தான் கேட்பதிப்போ..

ஆத்தங்கர மரமே..அரசமர இலையே..
ஆலமர கிளையே..அதில் உறங்கும் கிளியே..
ஆத்தங்கர மரமே..அரசமர இலையே..
ஆலமர கிளையே..அதில் உறங்கும் கிளியே..
ஓடக்கர உழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சு நிக்குற பருத்தி..
தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா..
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா..
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது..
அட ஓட தண்ணி உப்பு தண்ணி ஆகாது..

பெண்: ஆத்தங்கர மரமே..அரசமர இலையே..
ஆலமர கிளையே..அதில் உறங்கும் கிளியே..

...........

பெண்:  மாமனே உன்ன காங்காம..
மத்தியில் சோறும் உங்காம..
பாவி நான் பருத்தி நாரா போனேனே..
காகம் தான் கத்தி போனாலும்..
கதவுதான் சத்தம் போட்டாலும்..
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே..
ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே உன் பேர் சொன்னேனே..
ஒத்தையில் ஓடும் ரயிலோரம் கத்தியே உன் பேர் சொன்னேனே..
அந்த ரயில் தூரம் போனதும்..
நேரம் ஆனதும்..
கண்ணீர் விட்டேனே..
முத்து மாமா என்ன விட்டு போகாதே..
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே..

ஆண்:  ஆத்தங்கர மரமே..அரசமர இலையே..
ஆலமர கிளையே..அதில் உறங்கும் கிளியே..

.........

ஆண்:  தாவணி பொண்ணே சுகம்தானா..
தங்கமே தழும்பும் சுகம்தானா..
பாறையில் சின்ன பாதம் சுகம்தானா..
தொட்ட பூ எல்லாம் சுகம்தானா..
தொடாத பூவும் சுகம்தானா..
தோப்புல ஜோடி மரங்கள் சுகம்தானா..
ஐத்தையும் மாமனும் சுகம்தானா..
ஆத்துல மீனும் சுகம்தானா..
ஐத்தையும் மாமனும் சுகம்தானா..
ஆத்துல மீனும் சுகம்தானா..
அன்னமே..உன்னையும் என்னையும் தூக்கி வளத்த திண்ணையும் சுகம்தானா..
மாமன் பொண்ணே மச்சம் பாத்து நாளுச்சு..
உன் மச்சானுக்கு மயில பசுவு தோதாச்சு..

........

பெண்:ஆத்தங்கர மரமே..அரசமர இலையே..
ஆலமர கிளையே..அதில் உறங்கும் கிளியே..

ஆண்: ஓடக்கர உழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சு நிக்குற பருத்தி..
தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா..
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா..

பெண்: உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது..
அட ஓட தண்ணி உப்பு தண்ணி ஆகாது..

ஆண்: ஆத்தங்கர மரமே..அரசமர இலையே..
ஆலமர கிளையே..அதில் உறங்கும் கிளியே..