THENDRAL VANDHU
தென்றல் வந்து....
Movie: Avatharam
Singers: Ilayaraja, S.Janaki
Music director: Ilayaraja
ஆண்: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல..
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல..
வந்து வந்து போகுதம்மா..
எண்ணமெல்லாம் வண்ணமம்மா..
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா..
உண்மையம்மா..
உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா..சின்ன கண்ணே..
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல..
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல..
பெண்: எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது..
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது..
ஆண்: எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது..
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது..
பெண்: ஓட..நீரோட..இந்த உலகம் அதுபோல..
ஆண்: ஓடும்..அது ஓடும்..இந்த காலம் அதுபோல..
பெண்: நிலையா நில்லாது நினைவில் வரும் நெறங்களே..
ஆண்: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல..
ஆண்: ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது..
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது..
பெண்: ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது..
அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது..
ஆண்: குயிலே..குயிலினமே.. அந்த இசையா கூவுதம்மா..
பெண்: கிளியே..கிளியினமே..அத கதையா பேசுதம்மா..
ஆண்: கதையாய்..விடுகதையாய்.. ஆவதில்லையே அன்புதான்..
பெண்: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல..
ஆண்: திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல..
பெண்: வந்து வந்து போகுதம்மா.. எண்ணமெல்லாம் வண்ணமம்மா..
ஆண்: எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா..
பெண்: உண்மையிலே உள்ளது என்ன என்ன..
வண்ணங்கள் என்ன என்ன..
ஆண்: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல..
பெண்: திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நினைப்புல..
..........
