INAIYE EN UYIR THUNAIYE

இணையே என் உயிர் துணையே


Movie:  Thadam

Singers: Sid sriram, padmalatha

Music director: Arun raj


ஆண்:  இணையே..என் உயிர் துணையே..
உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி..
அழகே..என் முழு உலகம்..
உன் விழிகளிலே.. 
கண் உறங்குது பாரடி..
அருகே..நீ இருந்தால்..
என் கைபேசி வாய் மூடுமே...
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்..
என் தேநீரில் தேன் கூடுமே..

பெண்:  இணையே..என் உயிர் துணையே..
உன் இனிமையிலே..
நான் கரைவது ஏனடா..
யுகமாய்.. கை விரல் பிடித்து..
நாம் நடப்பது போல் ..
நான் உணர்வது ஏனடா..
இணையே...

ஆண்:  மையல் காதலாய் மாறிய புள்ளி என்றோ மனம் கேட்குதே..

பெண்:  காதல் காமமாய் உருகொண்ட தருணம் நினைக்கையில் உயிர் வேர்க்குதே..

ஆண்: உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே சிலநாள் என்னை சுத்தம் செய்தாய்..

பெண்:  எந்தன் சேவைகள் எல்லாம் பாராட்டியே எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்..

ஆண்: ஆ..இணையே..என் உயிர் துணையே..
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி..

பெண்: யுகமாய் கை விரல் பிடித்து..
 நாம் நடப்பது போல்..
நான் உணர்வது ஏனடா..

ஆண்:  அருகே நீ இருந்தால்..
என் கைபேசி வாய் மூடுமே..
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்..
என் தேநீரில் தேன் கூடுமே..

இணையே..என் உயிர் துணையே..
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி..
யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல்..
நான் உணர்வது ஏனடி..
இணையே....