SAAYALI

 சாயாலி


Movie:  Adanga Maru

Singers: sathya prakash, chinmayi

Music director: Sam CS


ஆண்: கண் கேட்கும் கனா..
நெஞ்சுக்குள் வினா..
என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா..
கண் கேட்கும் கனா..
நெஞ்சுக்குள் வினா..
என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா..

கண் கேட்கும்...கனா...
நெஞ்சுக்குள்...வினா

பெண்: உன் அகம் வர...சொல் முகவரி..
உன் உடன் வர...ஏன்..அனுமதி..
தீராத நேரம் உன் கூட போதும்..
மாயாத நாள் மட்டும் நான் வாழ வேண்டும்..
ஆறாத ஆசை ஓயாமல் தோணும்..
நாள் நேரம் பாராமல் தோள் சாய வேணும்..

ஆண்: ஓ..சாயாலி...ஓ..சாயாலி..
என் உள்ளில் நீ பூகம்பம் செய்தாயடி..
ஓ..சாயாலி..ஓ..சாயாலி..
என்னை நீ வேரோடு பேர்த்தாயடி..

கண் கேட்கும் கனா..
நெஞ்சுக்குள் வினா..
என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா..

பெண்: கண் கேட்கும் கனா..
நெஞ்சுக்குள் வினா..
என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா..

ஆழி போல் சூழ்ந்திடும்..அன்பிலான வீடிது..
ஓர் உயிர் போலவே  நாங்கள்   வாழும் கூடிது..

ஆண்: ஆழி போல் சூழ்ந்திடும் அன்பிலான வீடிது..
ஓர் உயிர் போலவே நாங்கள் வாழும் கூடிது..

பெண்: தூரத்து வானத்து மழை போல சந்தோஷம் என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும்..

ஆண்: கள்ளங்கள் இல்லாத பாசங்கள் கொண்டிங்கு காற்றும் இங்கே தாலாட்டு மீட்டும்..

பெண்: தேவைகள்.... வேறில்லை....
நாங்களும்....வாழ்ந்திட...

ஆண்: அன்பினில்..வாழ்கிறோம்...
இன்பம் கூடிட..

பெண்: நான் சாயாலி..நான் சாயாலி..
என் உள்ளில் பூகம்பம் செய்தாய் இங்கே..
நான் சாயாலி..நான் சாயாலி..
என்னை நீ வேரோடு பேர்த்தாய் இங்கே..



ஆண்: நீ இல்லா நாழிகை..தீயில் வேகும் ஓர் நிலை..
கூடவே நீ வர..கூறு நீயும் யோசனை..

பெண்:  தேய்நிலா ஆகிறேன்.. தூரம் நீயும் போகயில்..
வா உலா போகலாம்.. கூடல் கூடும் வேளையில்..

ஆண்:  என் கண்ணின் சாரத்தில்..உன் பிம்ப மீறல்கள்..
ஏனோ..என்னை தோற்பிக்கத்தானோ..

பெண்: கண்ணாடி நெஞ்சின் மேல்.. உன் அன்பின் பாரங்கள்..
ஏனோ..என்னை சில்லாக்கத்தானோ..

ஆண்:  ஏன்..இனி..தாமதம்..வா..உடன்.. வாழ்ந்திட..

பெண்: நாட்களும் தீரும் முன்..சேர்வோம் வாழ்ந்திட..

பெண்:  நான் சாயாலி..நான் சாயாலி..
என் உள்ளில் பூகம்பம் செய்தாய் இங்கே..
நான் சாயாலி..நான் சாயாலி..
என்னை நீ வேரோடு பேர்த்தாய் இங்கே..

ஆண்: கண் கேட்கும் கனா..
நெஞ்சுக்குள் வினா..
என் கூட நீ வந்தால் இன்பம் என்பேனா..
கண் கேட்கும் கனா..
நெஞ்சுக்குள் வினா..
என் கூட நீ வந்தால் இன்பம் என்பேனா..

சாயாலி...சாயாலி... சாயாலி..சாயாலி..
சாயாலி..சாயாலி..சாயாலி..சாயாலி..

அடி..நீ..என்..சாயாலி .....



....................